எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 4, 2009

செங்கிஸ்கான் வரலாறு

Monday, October 5, 2009

காம்ரேட்டுகளின் கடவுள் நம்பிக்கை

பூசை புனஸ்காரங்களுடன் காம்ரேட்டுகளின் கொண்டாட்டம் இது தான் இன்றைய நிலை கம்யூனிஸம் எங்கே?


Monday, September 28, 2009

சனி பெயர்ச்சி பலன்கள்


இந்த சனி பகவான் என்பவர் யார்?சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?


உண்மையாக சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சனிப்பெயர்ச்சி - சனிப்பெயர்ச்சி என்று எந்த ஏட்டைப் பார்த்தாலும் சனிப்பெயர்ச்சி மயம்தான்.

சனி பகவான் - சிம்ம ராசியிலிருந்து - கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து குடிபெயர்கிறாராம்!

சரி; இந்த சனி பகவான் என்பவர் யார்?-வானமண்டலத்திலிருந்து கத்திரி - அக்னி நட்சத்திரம் என்ற பெயர்களில் நம்மையெல்லாம் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறதே சூரியன்; அந்த சூரியனுக்கும் சாயாதேவி என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த சனி பகவான் என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் சூரியனைக் கட்டியணைத்து கர்ப்பம் தரித்து ஒரு மகனையும் பெற்றெடுத்தாள் ஒரு பெண் என்றால் எத்தனை வோல்டேஜ் - ஏ.சி. வசதி படைத்த பெண்ணாக அவள் இருந்திருக்கவேண்டும்?

வோல்டாஸ் - ஏ.சி. கம்பெனிக்காரர்களைத்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான்

தங்களது ஏ.சி. கருவிகளை எரிமலையையும் பனிமலையாக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்!

இந்த சனி என்பது பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள் என்கிறது விஞ்ஞானம். வியாழன் என்ற கோளுக்கு அடுத்தபடியாக இது ஒரு மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு மட்டுமே 73 ஆயிரம் மைல் என்று அறுதியிட்டு உறுதிபட வரையறுத்திருக்கிறது விஞ்ஞானம்.

பூமிக்கும் இந்த சனி என்கிற கோளுக்குமிடையில் உள்ள தூரம் எவ்வளவு? 75 கோடி மைலாகும்!

இந்த சனிக் கிரகத்தை - கோளைத்தான் இங்கே சனி பகவான் என்கிறார்கள்.

விஞ்ஞானம் கூறும் சனி ஒரு கோள் என்பதை நம்புவதா? நம்மூர் சோதிடர்கள் சனிபகவான் என்கிறார்களே அதை நம்புவதா?

விடை காண்பது மிக எளிது!

விஞ்ஞானம் கூறுவது - அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் எல்லாமே உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் - மக்களுக்குப் பொதுவானது!

தொலைக்காட்சி என்றால் உலகத்தின் எந்த நாட்டிலும் - எந்த வீட்டிலும் படிப்பறிவற்ற பாமரன்கூட இயக்கலாம். காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்!

செல்போன் என்றால் முதலாளியின் கையிலும் வைத்துக்கொள்ள முடியும்; அவரின்கீழ் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் பையிலும் வைத்துக் கொள்ளலாம்; அவரும் பேசலாம். இவராலும் பேச முடியும்.

இப்படி விஞ்ஞானம் கூறுவதையும் அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளின் பயன்களையும் எல்லோரும் அனுபவிக்கலாம்! ஆனால் -சோதிடம் சொல்லும் இந்த சனிபகவான் - அவரது பெயர்ச்சி பற்றியெல்லாம் - உலகில் எத்தனை நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும்? அவர்களுக்கெல்லாம் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றி எதுவும் தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் நம்ம ஊர்த் திருநள்ளாறு போல - சனீஸ்வரன் கோயில் என்று உண்டா? அங்கே எல்லாம் நளதீர்த்தக்குளங்கள்தான் உண்டா?

காக்கையின் மேல் ஓர் ஆளே ஏறி உட்காரலாம். காக்கை நசுங்காது. சனீஸ்வரர் ஏறி அமர்ந்த பிறகும் பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை போல காக்கை அப்படியே இருக்கும் என்றால் நம்புவார்களா?

நம்பமாட்டார்கள் - என்ன காரணம்?

தொலைக்காட்சிப் பெட்டி போல - செல்போன் போல எல்லோரும் சனி பகவானைக் கண்ணால் காணமுடியாது! அவன் எங்கேயிருந்து எங்கே போகிறான் என்பதை ஜோதிடர்கள்தான் கண்டுபிடித்துப் பலன் சொல்ல வேண்டும். யாரை ஏழரைநாட்டுச் சனி பிடித்துக்கொள்ளும்? யாரை விட்டுவிடும்? என்பது பற்றியெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதைத்தான் நம்பித் தொலையவேண்டும். ஆனால் -

செல்போன்களால் என்ன பயன் என்பதை ஒவ்வொருவரும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது விஞ்ஞானத்தின் சக்தி.

ஜோதிடர்கள் கூறும் சனிபகவான் சக்தி என்ன?

திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா.

பக்தர்கள் நளதீர்த்தத்தில் நீராடும்போது அவர்களது உடைமைகள் திருட்டுப் போவதாகப் புகார்!

யாரிடம் புகார் கூறுகிறார்கள்? சனீஸ்வரரிடமா? போலீசாரிடம்தான் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துத் தரும்படி கோருகிறார்கள்.

பக்தர்களின் உடைமைகள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க கோவிலைச் சுற்றி 37 ரகசியக் கேமராக்களை போலீசார் பொறுத்தியிருக்கிறார்கள்.

பக்தர்களைப் பாதுகாக்க மொத்தம் அங்கே 1500 போலீசார்!

பக்தர்கள் சனீஸ்வரனுக்குச் சக்தி அதிகமா? போலீசாருக்கு சக்தி அதிகமா? தங்கள் உடையைக் காக்கும் சக்தி போலீசாருக்கே உண்டு என்று நம்புகிறார்கள்!

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, -

73 ஆயிரம் மைல் குறுக்களவு கொண்ட சனி நிஜமாகவே பெயர்ந்தால் என்ன ஆகும்?

நினைத்துப் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறும்!

- நாற்பதாண்டுகளுக்கு முன்பு -

விண்ணிலே பறந்து கொண்டிருந்த சாட்டிலைட் ஒன்று பூமிப் பந்து நோக்கி வருகிறது; எங்கே விழும் என்று கணிக்க முடியவில்லை; எங்கே விழுந்தாலும் நாசம்; சர்வநாசம்தான் என்று உலகமே பயந்து நடுங்கியது!

அதுபோல சனி என்ற கோள் இடம்பெயர்ந்து பூமி நோக்கி வந்தால் என்ன ஆகும்?

சனிப் பெயர்ச்சியின் பலன் எழுதுபவர்கள், அதனை நம்புகிறவர்கள் எல்லாம் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை,

நளன்குளம் என்கிற மூடநம்பிக்கைக் குளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது உடைமைகளை சனி பகவானால் பாதுகாக்க முடியவில்லை. அதைத்தான் -

நளன்குளத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள 12 கேமராக்கள் எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.

அதனால்தான்

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, கோவில் நிருவாக அதிகாரி அறைக்குள்ளும், திருநள்ளாறு காவல் நிலையத்திலும் செயல்படுகிறது.

இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும், இதனால் பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் என கோவில் நிர்வாக அதிகாரி பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார் -
என்கிறது பத்திரிகைச் செய்தி!

-------------------------(நன்றி: முரசொலி 27.9.2009)

Sunday, September 27, 2009

இருள் பொருள், இருள் ஆற்றல்

முனைவர் த.வி.வேங்கடேசுவரன், ‘இருள் பொருள், இருள் ஆற்றல்’ என்ற தலைப்பில் 26-09-09 அன்று பேசினார். அதன் வீடியோ இங்கே.


Watch Dark Matter, Dark Energy (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.comஇரண்டாம் பகுதி:


Watch Dark Matter, Dark Energy (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

Thursday, September 10, 2009

5 ஆண்டுகளில் தமிழகத்தில் காங். ஆட்சியைப் பிடிக்கும்

தமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6.48 மணிக்கு காமராஜர் அரங்கத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அரங்கத்துக்குள் 35 வயதுக்குட்பட்ட கட்சித்தொண்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 6.50 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரையில் இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்.

கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கோஷ்டிகள் ஒழிக்கப்படும்...

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது.

உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கோஷ்டி பூசல்கள் மறைந்துள்ளது.

இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் உங்கள் கையில் இளைஞர் காங்கிரசை ஒப்படைத்து இருக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழையுங்கள். பெண்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

மக்களே ஊழலை ஒழிக்க வேண்டும்...

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல்..

கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார்.

பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில்,

இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.

இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.

உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.

எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.

உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது.

நன்றி:தட்ஸ்தமிழ்

Thursday, September 3, 2009

ஆந்திர முதல்வர் மரணம் - இந்தியாவுக்கே மாபெரும் இழப்பு


ஆந்திரா முதல்வரின் மரணம் நம் இந்தியாவிற்கே மாபெரும் இழப்பு.

எல்லோருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு அவர் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை விட மக்களுக்காக தன்னுயுர் நீத்த மனிதர் அவர் சாதாரண மனிதர் அல்ல மாமனிதர்.

அவரைப் போன்றொரு தன்னலமற்ற தலைவர்கள் கிடைப்பது அரிது.

அவர் இன்று இல்லாவிட்டாலும் அவருடை கடைசியாக தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப்பேட்டியில் நான் எப்போதும் மக்களுடனே இருக்க விரும்பி மக்களின் குறைகளை தீர்ப்பதாகவும் சொல்லிருக்கிறார் என்றால் அவருடைய மனம் எப்போதும் மக்களின் மீதே இருந்திருக்கிறது என்பதற்கு சான்றாக அமைகிறது.

மீண்டும் ஒரு முறை என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆட்கொனா துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, September 2, 2009

ஆந்திர முதல்வர் மரணம்

ஆந்திர மாநில மக்களால் "ஒய்.எஸ்.ஆர்." என்று மிகவும் அன்போடு அழைக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. ஆந்திர மாநில அரசியலை புரட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.

தெலுங்கு தேசம் கட்சியை அசைக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அந்த மாயையை உடைத்து ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சிக்கு ராஜசேகர ரெட்டி புத்துணர்ச்சி கொடுத்தார். அதனால் தான் சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இவரை "கடப்பா புலி" என்று அடிக்கடி வர்ணிப்பதுண்டு.

60 வயதாகும் ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் செய்து வந்த சாதனைகள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. இதனால் தான் ஆந்திரா முதல்-மந்திரிகளில் 5 ஆண்டுகால ஆட்சியில் முழுமையாக இருந்த முதல் நபர் என்ற சாதனையை இவரால் படைக்க முடிந்தது.

இந்தியாவில் உள்ள மாநில முதல்-மந்திரிகளில் மிக, மிக சிறப்பான ஆட்சியை கொடுப்பதில் நம்பர்-ஒன் இடத்தில் ராஜசேகர ரெட்டி இருப்பதாக 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனால் காங்கிரசாரிடம் மட்டுமின்றி மற்ற கட்சி அரசியல் தலைவர்களிடமும் ராஜசேகர ரெட்டி மதிப்பும், மரியாதையும் பெற்று இருந்தார்.

நக்சலைட்டுக்களின் தொந்தரவுகளை மீறி, ஆந்திர மாநிலத்தின் அசராத வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சிறப்பு இவருக்கு உண்டு. மிக குறுகிய காலத்தில் ஆந்திராவை நம்பர்-ஒன் மாநிலமாக மாற்றப் போவதாக அவர் மார்தட்டி சொல்லிக் கொண்டிருந்தார். இதற்காகவே ஆந்திர மக்கள் தொகையில் 75 சதவீதம் இருக்கும் விவசாயிகளை முன்னேற்ற அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்தப்படி இருந்தார்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை இப்படி, சோகமாக முடியும் என்று யாருமே நினைக்கவில்லை. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி ராஜசேகர ரெட்டி பிறந்தார். இவரது முழுப் பெயர் எடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி.

செல்வந்த குடும்பத்தில் பிறந்த இவர் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா எம்.ஆர்.மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் சிறிது காலம் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.

1973-ம் ஆண்டு இவர் தன் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி நினைவாக புலி வேந்துலா நகரில் பெரிய மருத்துவமனை கட்டினார். அதோடு ஒரு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி கட்டினார். பிறகு அந்த கல்வி நிறுவனங்களை லயோலா கல்லூரி நிறுவனத்துக்கு கொடுத்து விட்டார்.

ராஜசேகர ரெட்டியின் மூதாதையர்கள் அனைவரும் பொதுச்சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்த சேவையாற்றும் குணம் ராஜசேகர ரெட்டியிடமும் காணப்பட்டது. படிக்கும் காலத்திலேயே ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்து வந்த ராஜசேகர ரெட்டி 1978-ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடஆரம்பித்தார்.

கடப்பா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து 4 தடவை எம்.பி.ஆக தேர்வானார். பிறகு மாநில அரசியலுக்கு திரும்பிய அவர் தொடர்ச்சியாக 4 தடவை புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானார்.

8 தேர்தலை எதிர்கொண்ட அவர் ஒரு தடவை கூட தோல்வி அடைந்தது இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் "தோல்விக்கு தோல்வி கொடுத்தவர் எங்கள் ஒய்.எஸ்.ஆர்." என்று புகழ்வதுண்டு.

1980 முதல் 1983 வரை இவர் மாநில அரசில் பல்வேறு மந்திரி பதவிகளை வகித்தார். ஊரக மேம்பாடு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ராஜேசேகர ரெட்டி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஏராளம். அரசியல் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியம் தான் அவரை மேலும், மேலும் உயர்த்தியது.

1983-ம் ஆண்டு அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். 1985 வரை தலைவராக இருந்த அவர் மீண்டும் 1998 முதல் 2000 வரை 2-வது தடவையாக தலைவர் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ராஜசேகர ரெட்டி அமர்ந்தார்.

2004-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ராஜசேகர ரெட்டி, அந்த காலக்கட்டத்தில் செய்த நூதனமான போராட்டங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டுவதாக மாறியது.

2000-ம் ஆண்டில் ஆந்தி ராவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து ராஜசேகர ரெட்டியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆந்திர மாநில அரசியலில் இது பிரளயத்தை ஏற்படுத்தியது.

2003-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி ஆந்திரா மாநிலம் முழுவதும் 1400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். கிராமம், கிராமமாக சென்றார். ஏழை, எளிய மக்களை சந்தித்துப்பேசினார். இது ஆந்திராவில் அடித்தள மட்டத்தில் இருந்த மக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பியது. காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சிப் பெற்றது.

இதன் காரணமாக 2004-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜசேகர ரெட்டி 14-5-2004ல் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.

2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவ சாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினை களை ராஜசேகர ரெட்டி நேரில் பார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என் னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்தி ரையின் போது அவர் மன தில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.

முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக் கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண் டார். தனது முதல் பட்ஜெட் டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக் கீடு செய்தார்.

ஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.

விவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப் டுத்தினார். கிராம விவசாயிகள் வாழ் வில் வளம் பெருக வேண்டு மானால் நீர்ப் பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட் டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.

அதோடு Òஜலயக்ஞம்Ó என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட் சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர் களையும் பிரமிக்க வைத் தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத் துக்கு கொண்டு வந்தார்.
பல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடி ரூபாய்.

இவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.

இந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திரா வில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்தி ராவின் ஒட்டு மொத்த விவ சாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயி களின் வாழ்வில் வசந்தம் வீசியது.

நீர்ப்பாசனத் திட்டங் களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.

இதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந் தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக Òஇந்திரம்மா திட்டம்Ó என் றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.

ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

ஏழைகள் மீது அவர் காட் டிய பரிவு உண்மையான தாக இருந்தது. அதனால் தான் கடந்த மே மாதம் பாராளு மன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே சம யத்தில் தேர்தல் நடந்த போது ஆந்திரா மாநில மக் கள் மீண்டும் ராஜசேகர ரெட்டியை முழு மனதுடன் ஆதரித்தனர்.

சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் கலக்கினார். அவருக்கு இணையாக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் கலக்கியது.

அவர்கள் இருவரும் ஓட்டுக்களை அள்ளி விடுவார்கள் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் தெலுங்கு தேசத்தையும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் ஆந்திர மக்கள் ஓட ஓட விரட்டி விட்டனர். ராஜசேகர ரெட்டி செய்த மக்கள் சேவை முன்பு அந்த 2 கட்சிகளும் எடுபடாமலே போய் விட்டன.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 42 எம்.பி. தொகுதிகளில் 33 இடங்கள் கிடைத்தன. 294 சட்டசபை தொகுதி களில் 156 இடங்களைப் பிடித்து ராஜசேகர ரெட்டி சாதனை படைத்தார். மீண்டும் 2-வது தடவையாக கடந்த மே மாதம் 20-ந் தேதி ஆந்திர முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.

ஆந்திர மாநில அரசியல் வரலாற்றில் என்.டி.ராமராவ் மட்டுமே தொடர்ச்சியாக 2 தடவை முதல்-மந்திரி பதவி ஏற்று சாதனை படைத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் இருந்த சாதனையை நிகழ்த்தியது ராஜசேகர ரெட்டி மட்டுமே.

அடுத்து வரும் 5 ஆண்டு களுக்குள் ஆந்திராவில் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய அவர் நினைத்திருந்தார். இதற்காக அவர் பல தடவை தன் ஆசையை வெளியிட்டார்.

ஆந்திரா மக்களும் பூரிப் போடு அவற்றை எதிர் பார்த் திருந்தனர். ஆனால் அதற்குள் எமன் அவசரப் பட்டு விட்டான். ராஜசேகர ரெட்டிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முடி வால் அவர் மனைவி விஜய லட்சுமி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, மகள் சர் மிளா நிலை குலைந்து போய் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியே சோகத்தில் மூழ்கி உள்ளது

சோனியா கண்ணீர் விட் டார். ஆந்திரா மக்கள் அழுது புலம்பியபடி உள்ளனர். அவர்கள் மனதில் ராஜ சேகர ரெட்டி ஆழமாக இடம் பிடித்துள்ளார். அந்த இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவது கேள்விக்குறி தான்.

Wednesday, August 26, 2009

கண்கள், கைகளை கட்டி தமிழர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சி

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது தமிழர்களின் கண்கள் மற்றும் கைகளை கட்டி இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகள்

விடுதலைப்புலிகளின் வசம் இருந்த வன்னி பகுதியை பிடிக்க இலங்கை ராணுவம் கடும்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்குவாழும் தமிழர்களை பிடித்து கடும் சித்ரவதை செய்து கொன்றனர்.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்ததங்கள் அரசையும், ராணுவத்தையும் களங்கப்படுத்தும் விதமாக பொய்செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாக தெரிவித்தது.

ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட தகவல் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த சேனல்- 4 என்ற டி.வி. சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை ஒளிப்பரப்பியது.

வன்னிபோரின் போது தமிழர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவைத்து இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தமான கொடூரகாட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.

இக்காட்சிகள் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டு செய்தியாளர்கள் போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு தடைவிதித்து இருந்தது.

இந்த தாக்குதலை சேனல்- 4 டி.வி. நிறுவ அதிகாரி ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களா? இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தன்னுடன் சேர்ந்து பார்த்த நடுநிலை வகிக்கும் சிங்கள ஊடகத்தினர் இது உண்மையானதுதான் என தன்னிடம் கூறியதாகவும் மில்லர் கூறினார்.

இதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான கோரச்செயல்கள் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடவில்லை.

மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே ராணுவம் ஈடுபட்டது என்றும் தெரிவித்துள்ளது.

Friday, July 3, 2009

தி.மு.க. வின் ஜனநாயக விரோத போக்கு

திருச்சியில் கடந்த 21-ம் தேதி தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது.தங்கபாலு பேசும்போது
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும்
என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி
கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும்
அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூடபாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்'என்கிறார்.

என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின்
வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு
நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை
போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல்
அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.

அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது .
இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி
இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் மக்கள் காங்கிரஸை அதன் கொள்கையின்
அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல
திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று
சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,
அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.

நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை
தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.
அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை.
மக்கள் காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.

தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க
வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும்,
அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும்
எதிர்காலத்தில் அடிபணிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏழைகள், நடுத்தர மக்களைக் கவர மம்தா பாணியில் பிரணாப் அசத்தல்* கிலோ ரூ.3 விலையில் மாதம் தோறும் ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசி

ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில், வரிச் சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சமர்ப்பித்தார். கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது; தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் மீது விதிக்கப்பட்டு வந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும். தங்கம், வெள்ளி நாணயங்கள், செட்-டாப் பாக்ஸ்கள் விலை உயர்கிறது; எல்.சி.டி., "டிவி', மொபைல் போன், உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் குறைகின்றன. தேசிய அளவில் ஆன்-லைன் வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படுகிறது.


நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே, பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. மம்தா ரயில்வே பட்ஜெட்டைப் போல, மக்களை பாதிக்காத புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.50 லட்சத்திலிருந்து 1.60 லட்சமாக 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இது 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 ரூபாய் அளவுக்கு வருமான வரி குறையும்; மூத்த குடிமக்களுக்கு 1,500 ரூபாய் குறையும்.மேலும், ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் (பிரிஞ்ச் பெனிபிட்) மீது விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டதால், நிறுவனங்களிடமிருந்து மேலும் சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.


சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில வரிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மீது தற்போது 10 கிராமிற்கு 100 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது; இனி 200 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு கிலோ தங்கத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் விதிக்கப்படும் சுங்க வரி இனி, 1,000 ரூபாயாக இருக்கும்.இதனால், தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக் கட்டிகள் விலை உயரும். செட்-டாப் பாக்ஸ்கள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் உயரும்; ஜவுளிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.


உயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்.சி.டி., "டிவி',கள் மீதான சுங்க வரியும் 5 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. அதனால், எல்.சி.டி., "டிவி', மற்றும் மொபைல் போன்கள் விலை குறையும். மேலும், உயிர் காக்கும் மருந்துகள், வணிகச் சின்னம் பொறிக்கப்பட்ட நகைகள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், சாப்ட்வேர் பொருட்கள் போன்றவற்றின் விலை குறையும்.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இனி தினச்சம்பளம் 100 ரூபாய் வழங்கப்படும். மேலும், தேசிய அளவில், "ஆன்-லைன்' வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படும். அத்துடன் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


தற்போது, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் ஆண்டிற்கு 1 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.மொத்தத்தில் ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் பிரணாப், கிராமப்புற பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதின் மூலம் தேவை அதிகரித்து, அதனால் பொரு ளாதாரம் வளரும் என்ற அடிப்படையை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாக இது கருதப்படுகிறது.மொத்த நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த போதும், வளர்ச்சி தேவை என்ற முறையில் முதல் தடவையாக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவினம் கொண்ட பட்ஜெட்டை படைத்திருக்கிறார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த சில மணி நேரத்தில் பங்குச் சந்தை, 869 புள்ளிகளை இழந்து நேற்றைய வர்த்தகம் 14,043 என்று முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் திட்டவட்டமாக மொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் பட்ஜெட் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மொத்த செலவு முதன் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் : பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் :
* வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தனி நபர் வருமான வரி மீதான 10 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*உதிரிச் சலுகைகள் ( பிரிஞ்ச் பெனிபிட் ) மீதான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது.
*கம்பெனிகள் வரியில் மாற்றம் இல்லை.
*ராணுவத்திற்கான ஒதுக்கீடு 34 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாயாகியுள்ளது.
*பொருளாதார மந்தநிலை காரணமாக நிதி ஊக்குவிப்பிற்காக ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் 2008 -09ம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது.
*நெடுஞ்சாலைகளுக்கான ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர, 3,973 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கான ஒதுக்கீடு 87 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 887 கோடி ரூபாயாகியுள்ளது.
*மழைநீர் வடிகால் திட்டங்களுக்கான நிதி உதவி, 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
*பண்ணை கடன்களுக்கான ஒதுக்கீடு இரண்டு லட்சத்து 87 ஆயிரம் கோடியில் இருந்து மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


விவசாயிகளுக்கு சலுகை : *குறிப்பிட்ட காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை அளிக்கப்படும்.
*நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் 2010 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*பொருட்கள் பரிமாற்ற வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*குறைந்தபட்ச பதிலீட்டு வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*பெட்ரோலிய துறைக்கு அளிக்கப்பட்ட வரி விடுமுறைக் காலம் இயற்கை எரிவாயு துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கட்சி நன்கொடை : *அரசியல் ரீதியாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை உண்டு.
*உரங்களுக்கான மானியம் சத்துக்களின் அடிப்படையில் இருக்குமே அன்றி, விலை அடிப்படையில் இருக்காது.
*வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.
*வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறப்பதற்காக ஒரே நேர மானியமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.


சம்பளம் இனி ரூ.100 :*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு, நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 ரூபாயாக உயர்த்தப்படும்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 2008-09ம் நிதியாண்டில் 4.74 கோடி பேர் பலன் அடைந்தனர்.
*தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான பணிகள் துவங்கி விட்டன.
*பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
*தேசிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஊரக வீட்டு வசதி நிதியாக, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., / எஸ்.டி.,யினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
*கிராமப்புற பெண்களில் 50 சதவீதம் பேர், மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் கல்வி கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இதன்மூலம் ஐந்து லட்சம் மாணவர்கள் பலன் அடைவர்.
*தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.
*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.
*புதிய ஓய்வூதிய சலுகையின் கீழ் ஜவான்கள் மற்றும் கமிஷன் அதிகாரிகள் என, 12 லட்சம் பேர் ஜூலை மாதம் முதல் பலன் அடைவர்.
*துணை ராணுவப் படையினருக்காக ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும்.
*நாட்டு மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் 12 முதல் 18 மாதங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*தற்போதுள்ள ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் புதிய ஐ.ஐ.டி.,க்களுக்காக 2,113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, 3,472 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


சுங்க வரி மாற்றம் இல்லை
*சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் மாற்றம் இல்லை.
*"இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்திற்கான ஒதுக்கீடு 63 சதவீதம் கூடியுள்ளது.
*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.
*காலநிலை மாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், எட்டு இயக்கங்கள் துவக்கப்படும்.
*ஊரக சுகாதார இயக்கத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட, 257 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
*இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மேற்கு வங்கத்தில் புயலால் பாதித்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய 1,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மொத்தச் செலவு முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கீட்டை விட 34 சதவீதம் அதிகம்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009-10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். இதில், ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டை விட 34 சதவீதம் அதிகம். கடந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு 36 ஆயிரத்து 103 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதோடு, பலப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்காக அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பெற முடிவு செய்யப்பட்டது.தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட கமாண்டோ படைப் பிரிவை மேம்படுத்துவதற்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது.


மேலும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோர பாதுகாப்புப் படைக்கு அதி விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கும் ட்டமிடப்பட்டுள்ளது.இவற்றை வாங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்பதை கருத்தில் கொண்டே, கடந்தாண்டை விட இந்தாண்டு 34 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவை விட குறைவு: தற்போதைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, நாட்டின் மொத்த வளர்ச்சியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே. பாகிஸ்தான் தனது ராணுவத்துக்காக மொத்த வளர்ச்சியில் 5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள் ளது. சீனா, 7 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 7,000 கோடி ரூபாயை செலவிடாமல் ராணுவம் திருப்பிச் செலுத்தியுள்ளது.பட்ஜெட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "அமைச்சரவை செயலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்' என்ற அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 2,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என்றார்.தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா :ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்கும் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஹேண்ட்லூம் மெகா கிளஸ்டர் எனப்படும் �த்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். இதே போல, ராஜஸ்தானில் விசைத்தறி பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கார்பெட் தொழிலுக்கான பூங்காக்கள், ஸ்ரீநகரிலும் உ.பி.,யில் உள்ள மிர்சாபூரிலும் அமைக்கப்படும்.புதுச்சேரி விமான நிலையம் மேம்படுத்தப்படும் : விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வழங்கப்படும் 190 கோடி ரூபாய் நிதியில், விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு என, 99.15 கோடி வரை செலவிடப்படும். இந்த நிதி, இந்திய விமானநிலைய அதிகார ஆணையத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் 20 கோடி ரூபாய் வரை வடகிழக்கு மாநில விமான நிலைய மேம்பாட்டுக்கு செலவிடப்படும். மீதமுள்ள 79.15 கோடி ரூபாயின் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், அக்டி மற்றும் புதுச்சேரி விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்
.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : வெற்றிகரமான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டு இத்திட்டத்தையும் விவசாயத்துறை, வனத்துறை, நீர்வளம், சாலை திட்டங்கள் உள்ளிட்ட
அரசின் பிற திட்டங்களுடன் இணைத்து செயலாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 115 மாவட்டங்கள் மட்டும் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற திட்டங்களுடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய வரையறைகளை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்யும்.இந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.பாரத் நிர்மாண் திட்ட சாலைகள் நீளம் அதிகரிப்பு : பாரத் நிர்மாண் திட்டத்தின்படி, இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 132 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கப்பட்டு இதற்கென, 48 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வேலைவாய்ப்பு மையங்கள் நவீன மயம் : வேலைவாய்ப்பு மையங்கள் நவீனப்படுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இதற்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த திட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான சாப்ட்வேர் மூலம் தேசிய அளவில் இணையதளம் ஒன்று துவங்கப்படும்.
வேலை தேடுவோர் ஆன்-லைன் மூலமாக நாட்டின் எந்தப்பகுதியிலும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் அனைத்தையும் இதன்மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும்.எங்காவது ஒரு இடத்தில் வேலை தேடி பதிந்தாலும், அதற்கேற்ப நிறுவனம் அந்த நபரை அழைக்கும் வகையில், இளைஞர்கள் தங்கள் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை பெற வசதியாக அமையும்.சுகாதார திட்டத்துக்கு கூடுதல் நிதி : நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கும் கீழேயுள்ள அனைத்து குடும்பமும் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இந்த பட்ஜெட்டின் மூலம் 2,057 கோடி ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது.வங்கி வசதிகள் ஏற்படுத்த திட்டம் :வங்கி வசதிகள் இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய வங்கிக் கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கிகளை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த புதிய இடங்கள் கண்டறியப்படும்.
அந்த இடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கிக் கிளைகள் துவங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் 100 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படும்.


மத்திய பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இடையில் வளர்ச்சி குறைந்த நிலை மாறி மீண்டும் 8 சதவீத மொத்த வளர்ச்சி எட்டும் வகையில் அமைந்திருக்கிறது' என்று, பிரதமர் மன்மோகன் பாராட்டினார்.


மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன் கூறியதாவது: பொருளாதார ஊக்குவிப்புக்கு தேவையான விஷயங்களைக் கண்டறிந்து, அதற்கான உத்திகளை வகுத்திருக்கிறார் நிதியமைச்சர். அவர் பணி பாராட்டிற்குரியது. உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்த போதும், இங்கே வளர்ச்சி காண உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே மொத்தவளர்ச்சி 7 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைத் தொடர்ந்து வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என்றார்.சிதம்பரம் கருத்து: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராகவும் தற்போது உள்துறை அமைச்சராகவும் உள்ள சிதம்பரம் கூறியதாவது:


இந்த 2009-2010 பட்ஜெட் மிகவும் திறமையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஊக்குவிப்பு நிதிகள் அளித்த நிலையில் இந்த பட்ஜெட் திட்டங்களும் சேர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் உர உப்புகளுக்கு அதன் நுண்ணுயிர்ச்சத்து அடிப்படையில் விலை, நேரடியாக விவசாயிக்கு மானியச் சலுகை சென்றடைய திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் புதுமைகள். அதே போல ஏழ்மை நிலையில் உள்ள மாணவர் வாங்கிய கல்விக்கடன் மீதான வட்டி தள்ளுபடி ஆகியவை வரவேற்கத்தக்கது என்றார்.


பங்குச் சந்தை சரிவு : நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா பட்ஜெட் குறித்து தெரிவித்த கருத்துக்கள் :
பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, அவசரப்பட்ட பதட்டமான செயலின் அறிகுறி. இது தற்காலிகமானதே, விரைவில் சீராகும். கிராமப்புற மக்கள் மேம்பாட்டை பட்ஜெட் மையமாகக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு இல்லாமல் குறுகிய பார்வையால் எழுந்த விளைவு. அதே போல பொதுத்துறை பங்குகள் விற்பனை குறித்து அரசு படிப்படியாகச் செயல்படும். அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும் என்று பட்ஜெட்டில் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு தெளிவாக இருக்கிறது. காலம் வரும் போது பொதுத்துறை பங்கு விற்கப்படும் என்றார்.

Thursday, June 25, 2009

அணு மற்றும் அணுகுண்டு

பள்ளியில் படிக்கும் போது இயற்பியல் பாடத்தை நிறைய மக்கப் செய்து தான் படித்தேன். அதில் ஒன்றும் புரியாது ஏனென்றால் அதில் சொல்லப்படும் விஷயங்கள்
கற்பனை மட்டுமே செய்து பார்த்துக் கொள்ளவேண்டும் மற்றபடி செய்முறை விளக்கங்கள் எல்லாம் ஒரு சில பாடத்தில் மட்டுமே செய்து காட்டுவார்கள்.

எனக்கு தெரிந்தவரை சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் எவ்வாறு ஸ்டார்ச் தயாரிக்கின்றன. சூரிய ஒளி படாத இடத்தில் இலைகளால் ஸ்டார்ச் தயாரிக்க
முடிவதில்லை என்ற சோனையை மட்டுமே எங்கள் பள்ளியில் என்னுடை வகுப்பில் செய்து காட்டினார்கள். மற்றபடி வேறெந்த சோதனையும் அவவளவாக செய்து காட்டவில்லை.
ஏனென்றால் மற்ற சோதனைகளெல்லாம் செய்தால் செலவு ஆகும் என்பதால் செய்யவில்லை போலும்.

மின்சாரம் என்றால் என்ன? அதிலும் முக்கியமாக இந்த எலக்டரான்கள்,புரோட்டான்கள் மற்றும் நியூட்ரானகள் சுத்தமாக ம்ம்கூம் இன்னும் தலையை சுற்றுகிறது. அது எப்படி இருக்கும் கேட்டால் எல்லாத் துகள்களும் இந்த மூன்று அணுக்களால் ஆனது என்பார்கள். என்னடா இது சும்மா நம்பளை குழப்பறாங்களே என்று மேலும் கேட்டால் எல்லாத் தனிமங்களும், எல்லாப் பொருள்களும் இந்த மூன்றால் ஆனது என்கிறார்கள்.உள்வட்டப் பாதை வெளி வட்டப்பாதை. உள்வட்டபாதையில் நியுட்ரானகளும் புரோட்டாங்களும் இருக்கும் அதன் வெளிவட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.நிறை எண் மாறுபடும் போது அதன் பண்புகளும் மாறுபடுகிறது.தனிமங்களும் மாறுப்டுகிறது இது எல்லாமே எனக்கு குழப்பம் தான்.

யாரவது இயற்பியல் வல்லுனர்கள் இருந்தால் எளிமையாக என்னைப் போல் உள்ள எல்லா Tube Light களுக்கும் புரிகிற மாதிரி விளக்கினால் புரிந்து கொள்வோம்.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அணு என்ற ஒரு பாடம் இருந்தது. அதில் ரூதர்போடு சோதனையும் இருந்தது. ஆனாலும் அடிப்படையாகவே எனக்கு எதுவும் புரியாததனால்
பள்ளியிலும் சரி வேறெங்கும் சரி நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. எப்பொழும் போல் மக்கப் தான் அத்தனையும் மனப்பாடம் செய்து ஒரு 175 மதிப்பெண்கள் பெற்றேன்.

சரி அந்த குழப்பம் இன்று வரை தொடர்கிறது. அது எப்பொழுது தெளிவாகுமோ என்று தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.அணுவை எப்படி கண்டுபிடித்தார்கள். அந்த அணுவில் இருந்து எப்படி அணுகுண்டு தயாரித்தார்கள்?

அணுகுண்டு அணுகுண்டு என்று சொல்கிறார்களே அது என்னடா அணுகுண்டு அதெப்படி இருக்கும்?

அது எப்படி தயாரிக்கப்படுகிறது அதை யார் யார் எல்லாம் சேர்ந்து கண்டு பிடித்தார்கள்?

அதை எதற்காக கண்டு பிடித்தார்கள். ஆக்கபூர்வ செயல்களுக்குப் பயன்படுத்தலாமா இல்லை அழிவுக்கு மட்டும்தான் அதை பயன்படுத்த முடியுமா? போன்ற இன்ன பிறவிஷயங்களை

என்.ராமதுரை அணு புத்தகத்தின் மூலமாக அழகாக விவரிக்கிறார்.

இந்த புத்தக்த்தை படித்த பிற்குதான் ஓரளவுக்கு பிடிப்பட்டது அணு சக்தி ஒப்பந்தத்தை பற்றி, பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளுக்கு போகக்கூடாது என்று
உலகம் ஏன் கவலைப்படுகிறது என்பதைப் பற்றி மற்றும் வடகொரியா அவ்வப்பொழுது நடத்தும் அணுகுண்டு சோதனையைப் பற்றி.

இந்தியா எந்த நிலையில் உள்ளது நம்மால் அணு ஆயுதம் தயாரிக்க முடியுமா, முடியாதா, இல்லை வல்லரசுகளிடம் மட்டும் தான் அந்த அணு ஆயுத பலம் இருக்குமா என்பதை நம்மால் ஓரளவு யூகிக்கமுடியும். கூடிய விரைவில் அந்த இடத்தை நம்மால் அடைய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது.

முடிந்தால் எல்லோரும் அந்த புத்தக்தை வாங்கிப் படியுங்கள் ஓரளவுக்கு புரியும் அணு அரசியலைப் பற்றி.

அணு புத்தகத்தை வாங்க இங்கே சொடக்கவும்

Thursday, June 18, 2009

ரீல் இப்பொழுது ரியல் ஆகப்போகுது - காமெடி கலாட்டா

கட்சியை விட்டு வெளியில் நான் வரமாட்டேன் ஆனாலும் பிராமணர்களுக்காக பாடுபடுவேன் என்கிறார் காமெடி நடிகர் எஸ்.வி. சேகர்.

நான் அ.தி.மு.க. விட்டு விலகவில்லை. என்றாலும் எனக்கும் அந்த கட்சிக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. சார்பில் எனக்கு எந்த தகவல்களும் சொல்லப்படுவது இல்லை. இது பற்றி கட்சி மேலிடத்தில் 16 முறை புகார் செய்து விட்டேன். எந்த பலனும் இல்லை.

எனவே இனி எந்த புகாரும் செய்யவும் எண்ணம் இல்லை. நான் எம்.எல்.ஏ.ஆக தொடர்ந்து நீடிப்பேன் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன்.

நான் சட்டசப்படி நடக்கிறேன். எனவே நான் கட்சி மாறவேண்டிய அவசியம் இல்லை. அகில இந்திய ஆரியர் முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை தொடங்குவது குறித்து யோசனை இருந்து வருகிறது. முற்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு பெற இந்த கட்சியை தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசினேன்.

அப்போது பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அல்லது முற்பட்ட சமுதாயத்துக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

இந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றினால் தி.மு.க.வுக்கு 25 லட்சம் ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்கும். நான் கட்சி தொடங்கும் அவசியம் இருக்காது.

அவர் இவ்வாறு கூறி இருப்பதனால் இவர் தனியாக கட்சி ஆரம்பித்தால் 25 லட்ச ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிறார்.

ரீல் காமெடியன் இப்பொழுது ரியல் காமெடியன் ஆகப்போகிறார்.

Wednesday, May 20, 2009

முன்னால் பிரதமர் ராஜீகாந்தியின் நினைவு நாள்

இன்று காங்கிரஸ் முன்னால் பிரதமர் ராஜீகாந்தியின் நினைவு நாள். அதேவேளையில் அவருடைய ஆத்தமா சாந்தி அடையவும் உலக மக்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் எல்லாம் பெற்று இன்புற அனைவரும் வேண்டுவோம்.

Tuesday, May 19, 2009

மாவீரன் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்

மாவீரன் பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். அவர் இறந்ததாக காட்டப்படும் உடல் பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக அவரை போன்ற ஒத்த முகத்தை செய்து ஒரு உடலைக் காட்டிஇருக்கிறார்கள் சிங்கள இராணுவம்.

ஏன் அவர்கள் அவ்வாறு வேறு ஒருவர் உடலைக் காட்ட வேண்டும். விடுதலைப் புலிகள் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை சிங்கள இராணுவம் கைப் பற்றியாகிவிட்டது ஆனால் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை மட்டும் பிடிக்க முடியவில்லை என்றால் அது அவர்களுக்கு உலக நாடுகள் மத்தியில் கவுர்வப்பிரச்னை அதனால் சிங்கள அரசாங்கமே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புள்ள ஒரு உடலை எடுத்து முகத்தை மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதை படம் பிடித்துக்காட்டி பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

இந்த உடலைப் பற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளது எல்லோருக்கும்.

1.இரண்டு நாட்களுக்கு முன்பு வரை சிங்கள் இராணுவம் பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்லும் போது நாங்கள் அவர்களை தாக்கி அதாவது ராக்கெட் லாஞ்சர் மூலமாக சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார்கள்.

அவ்வாறு சிங்கள ராணுவம் ராக்கெட் லாஞ்சர் மூலமாக தாக்கினால் அந்த வேனில் இருந்தவர்களெல்லாம் சிதைந்து இருப்பார்கள் அதாவது உடல்கள் எல்லாம் தனித்தனியாக
பியித்து எடுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில் முழு உடலைக் காண்பிக்கிறார்கள் என்றால் அது சந்தேகத்துக் குறியதே!

2. நேற்று ஒரு உடலைக் காண்பித்த போதும் இந்த உடல் none fire zone என்றழைக்கப் படும் போர் நடைபெறாத இடத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்டதாக சொன்னார்கள்.
போர் நடைபெறாத இடத்தில் அவருடை உடல் கிடப்பதற்கு எப்படி சாத்தியம்.

3. பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பித்து போகும்போது நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றார்கள், ஏன் பிரபாகரன் கடைசி நேரத்தில் தப்பித்து போக வேண்டும். பிரபாகரனுக்குத் தெறியும், இன்னும் எத்தனை விடுதலைப் புலிகள் மிச்சம் இருக்கிறார்கள், இன்னும் எவ்வளவு நாளைக்கு ஆயுதங்கள் உள்ளது, என்ன என்ன ஆயுதங்கள் உள்ளது, நாம் இந்தப் போரில் வெற்றி பெறுவோமா இல்லையா என்பது போன்ற விஷயங்கள் அவருக்கு நன்றாகவே தெறியும் அப்படி இருக்கும் போது அவர் எப்பொழுதோ தப்பித்து போக வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே அவர் கடைசி நேரத்தில் தப்பித்து செல்லவேண்டிய அவசியம் என்ன?

"நலமாக இருக்கிறார் பிரபாகரன்': வைகோ அளித்த பேட்டியில், ""பிரபாகரன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்; நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார். இந்தியாவில் உள்ள சில ஊடகங்கள் தான், அவர் உயிரோடு இல்லை; இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார் என செய்தி பரப்புகின்றன. இந்த செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை,'' என கூறினார்.

நேற்றைய ZTamil தொலைக்காட்சி பேட்டியின் போது பேசிய, ஈழத்தமிழர்களுக்காக நீண்ட வருடங்களாக குரல் கொடுத்துவரும் பழநெடுமாறன் அவர்கள் பிரபாகரன் இறக்கவில்லை அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றார். இவருக்கும் விடுதலை புலிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது அதனால் அவர் உறுதியாக சொல்கிறார் அதை நாம் சிறிதளவு யோசிக்கவேண்டிதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எல்லோரும் பிரபாகரன் இறந்ததை நம்பமறுக்கும் போது அந்த விஷயம் ஊர்ஜிதம் படுத்தபடவில்லை என்று தான் தோன்றுகிறது.

மாவீரன் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கவாய்ப்பு அதிகமாக உள்ளது.

யாரும் கவலைப்படவேண்டாம்.

Wednesday, May 6, 2009

எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது?

பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கா?


காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கா?


மூன்றாவது அணிக்கா?


இல்லை சுயேட்ச்சைக்கா?நான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களிக்க விரும்புகிறேன் நீங்களும் சிந்திக்கலாம் அந்த அணிக்கு வாக்களிக்க.

பா.ஜ.க ஒரு மதவாதக் கூட்டணி அது நாடறிந்த விஷயம் சரியான கொள்கை அவர்களுக்கு இல்லை, சரியான திட்டம் இல்லை, முக்கியமாக சரியான தலைமை அவர்களிடத்தில் இல்லை.

மூன்றாவது அணி என்று எடுத்துக்கொண்டால் இடது மற்றும் வலது சாரிகளின் பிற்போக்கான சிந்தனை மற்றும் செயல்பாடுகள்.உதாரணத்துக் எடுத்துக்கொண்டோமேயானால் அவர்கள் அமெரிக்காவிடம் அணு சக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை வாங்ககூடாது என்றும் நம் நாட்டில் உள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அணுசக்தி துறையில் முன்னேற வேண்டும் என்கிறார்கள்.

அணுசக்திக்குத் தேவையான மூலப்பொருள் யுரேனியம் நம் நாட்டில் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நமது தேவைக்கு போதுமானதாக இல்லை அதாவது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது.

சரி நம்மிடம் தோரியம் அதிகமாக உள்ளது அதை பயன்படுத்தி அணுசக்தி துறையில் முன்னேறலாம் என்றால் அது இன்னமும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது அது செயல்பாட்டிற்கு வரவேண்டுமானால் 10 லிருந்து 20 வருடங்கள் ஆகலாம். அதுவரை நாம் என்ன செய்வது மின்சாரத்தை எந்தவகையில் தயாரிப்பது, ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமானால் அடிப்படைத் தேவை மின்சாரம். அது இல்லாமல் எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. இதெல்லாம் தெரிந்தும் இடது மற்றும் வலது சாரிகள் நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று சொல்கிறார்கள், அமெரிக்காவிடம் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்றால் கூடாது தான்.

அதனால் இவர்க்ளுடை கொள்கை உதவாக்கரை கொள்கை இவர்களை ஆதரிக்க முடியாது.

நான்காவதாக சுயேட்ச்சைகள் என்று எடுத்து கொண்டால் அவர்களால் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையே தவிர எந்த விதப்பயன்பாடும் இருக்காது. அவர்களுடையத் தொகுதிக்கு அவர்களால் எதையும் பெரிதாக வாங்கித்தரமுடியாது அதனால் அவர்களும் ஒதுக்கப் படகூடியவர்களே.

ஆதலால் எல்லாவிததிலும் சாராசரியாக காங்கிரஸ் தான் நிலையான வலுவான அரசை நல்லாட்சியைத் தரமுடியும் என்று நான் ஆழமாக ந்ம்புகிறேன்.அதனால் என்னுடைய வாக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு.நீங்களும் அதை ஆதரிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, May 3, 2009

அணுசக்தி ஒப்பந்தம்

அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அளித்த ஒப்புதல் மூன்று நாட்கள் நடந்த போராட்டத்திற்குப் பின் கிடைத்த வெற்றியாகும். இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்க காங்கிரசில், நிறைவேற்றி ஒப்புதல் பெற, அதிபர் புஷ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலீசா ரைஸ் அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த, என்.எஸ்.ஜி., என்று அழைக்கப்படும், 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட, அணுசக்தி சப்ளை நாடுகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக இருந்தது.


சீனப் பிரதிநிதி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை: இதில், அமெரிக்கா மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் சீனாவையும் பணிய வைத்திருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக இந்தியா ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்து முற்றிலும் மாறிய சூழ்நிலையை நேற்று முன்தினம் கிடைத்த ஒப்புதல் தந்திருக்கிறது.அணு ஆயுதப் பரவல் தடை விஷயத்தில், சில நாடுகள் ஆட்சேபித்தன. சீனா அதிக பட்சமாக முட்டுக்கட்டை போட்டது. ஆனால், அமெரிக்காவின் தலையீட்டால், கடைசி முடிவு எடுக்கும் போது சீனப் பிரதிநிதி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக அமெரிக்கா தவிடுபொடியாக்கியது.


கடைசி நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைசுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. பல்வேறு நாடுகளையும் அவர் சமாதானப்படுத்தினார். அவர் இம்முயற்சியில் பெற்ற வெற்றி குறித்து கூறும் போது, "சர்வதேச அணுசக்தி முகமையிடமும், பின்பு அணு எரிபொருள் சப்ளை நாடுகள் குழுமத்திடமும் நிறைவேற்றப்பட முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்க பார்லிமென்டில் இதை நிறைவேற்ற கால அவகாசம் குறைவாக இருக்கிறது. ஆனால், இதை முடிவு செய்து நிறைவேற்றும் கமிட்டிகளிடம் பேசியுள்ளோம்' என்றார்.


பிரதமருக்கு பாராட்டு: சலுகைகளுடன் கூடிய அணு சக்தி வர்த்தகத்துக்கு என்.எஸ்.ஜி.,நாடுகள் இந்தியாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பதற்கு காரணமாகச் செயல்பட்ட , பிரதமர் மன்மோகன் சிங்கை , காங்கிரஸ் தலைவர் சோனியா பாராட்டினார்.இந்த ஒப்புதலை பெறுவதற்காக, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மன்மோகன் சிங்கை, சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஜனார்த்தன் துவேதி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், பிரித்வி ராஜ் சவுகான் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.


பிரதமர் இல்லத்தில் நடந்த 20 நிமிட சந்திப்பில், இந்த முயற்சிக்கு சோனியாவும், காங்கிரஸ் செயற்குழுவும் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இதில் வெற்றி பெறுவதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வெகுவாக புகழ்ந்தார் மன்மோகன் சிங்.

Sunday, April 26, 2009

கலைஞரின் கடைசி நாடகம் கரை சேர்க்குமா இந்த தேர்தலில்

கலைஞர் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் இன்று காலை 5 மணி முதல் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்திருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்கிற அரசில் நாடகத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார் கலைஞர்.

இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இன்று ஏன் தோன்றியது?

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றியதைப் போல் இவருக்கும் தோன்றிவிட்டதா இல்லை இது வெறும் தேர்தலில் தோற்று விடுவோமோ என்கிற பயம் கடைசியாக உள்ள அஸ்திரத்தை பயன்படுத்தி மக்களை மாற்றலாம் என்று கனவு காண்கிறார்.

இதை அவர் ஆறு மாதத்திற்கு முன்பு செய்திருந்தால் நாம் சொல்லலாம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் இவரல்லவா தமிழினத்தலைவர் என்று.

இப்பொழுது எல்லோருக்கும் தெரியும் இது வெரும் அரசியல் நாடகம் என்று.

பார்ப்போம் கலைஞரின் இந்த கடைசி நாடகம் அவரை இந்த தேர்தலில் கரை சேர்க்குமா என்று.

கண்டிப்பாக இல்லை சேர்க்காது.

Thursday, April 23, 2009

பராசக்தி சினிமா வசன பாணியில் இலங்கை பிரச்னை

லோக்சபா தேர்தலில் காங்., கூட்டணியை தோற்கடிப்பதற்காக, தமிழ் அமைப்புகள் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்., மற்றும் தி.மு.க., கட்சிகள் செய்த துரோகத்தை பராசக்தி பட கோர்ட் காட்சியை போல் சித்தரித்து, 'CD' தயாரித்து பொதுமக்களிடையே வழங்கி வருகிறது.

'CD'யில் உள்ள மாற்றப்பட்ட வசனம்: "இந்த நீதிமன்றம் விசித்திரமிக்க பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. வித்தியாசமான மனிதர்களையும் கண்டிருக்கிறது. ஆனால், உங்கள் முன் வாதாடும் இந்தத் தமிழன் வித்தியாசமான மனிதனும் அல்ல, வாதாடும் இந்த வழக்கும் விசித்திரமான வழக்கு அல்ல. வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய மனிதர்களில் நானும் ஒருவன்.மக்களுக்குள் கலகத்தை விளைவித்தேன்... அரசாங்கத்தை அதிரடியாக தாக்கினேன்... இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான்.நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை... நிச்சயமாக இல்லை.


மக்களுக்குள் கலகத்தை விளைவித்தேன். மக்களை கொடியவர்களாக ஆக்குவதற்காக அல்ல... மண்டிப்போன மந்தைக் கூட்டங்களாக மக்கள் ஆகிவிடக்கூடாதே என்பதற்காக. அரசாங்கத்தை தாக்கினேன். நான் அரசாள்வதற்காக அல்ல... அரசின் பகல் வேஷத்தை அம்பலப்படுத்துவதற்காக! (கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி)உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்... என் இனம்தான் பாதிக்கப்பட்டது... நேரடியாக பாதிக்கப்பட்டது. என்னை குற்றவாளி என்கிறீர்களே? இந்த குற்றவாளியின் இன வரலாற்றை கொஞ்ச தூரம் பின்னோக்கிப் பார்த்தால்... என் இனம் கடந்து வந்துள்ள சிறப்புகள் எத்தனை என்பதைப் பார்க்க முடியும்.கேளுங்கள் தமிழனின் கதையை; தீர்ப்பு எழுதுவதற்கு முன் கேளுங்கள் தமிழனின் கதையை...!


லெமூரியா கண்டத்திலே பரந்து விரிந்து எல்லைகளற்று வாழ்ந்தவன் தமிழன். எதையும், எவரிடத்திலும் கற்றவர்கள் அல்ல நாம். அனைவருக்கும் கற்றுக் கொடுத்த இனம். பண்பாட்டைப் பழகியவர்கள் இல்லை நாம். பண்பாட்டைப் படைத்தவர்கள்.கடலுக்கு அப்புறத்தில் தென்னாடு; இப்புறத்தில் தமிழ்நாடு. கடல் கோடின் சீற்றத்திற்கு நாம் மட்டும் விதிவிலக்கா... சொந்த நாட்டிலே வாழும் என் சகோதிரிகளின் நிலையைக் கண்டேன்... (கற்பழிப்பு, கொலை சம்பவ வீடியோ காட்சிகள்) காணக்கூடாத அவலங்களை எல்லாம் கண்டேன்."வந்தாரை வாழவைக்கும் தமிழினம்' மங்களகரமான பெயர்.


ஆனால், மூச்சிலும் சுதந்திரமில்லை. வந்தேறிய சிங்கள குடியினரின் இனவெறிக்கு ஆளாகி, வாழ வழியின்றி தவித்தது என் தமிழ் இனம். செழித்து வாழ்ந்த இனம் இன்று சீரழிந்துவிட்டது.தமிழினம் துடித்தது; தமிழினத்திற்காக நான் துடித்தேன். அதற்கு கைமாறாக தமிழினத்திற்கு கருணை காட்டினர் சிலர் (ராஜிவ் படம்). அமைதிப்படை என்ற பெயரால் அக்கிரமத்தின் ஆணி வேர் பதிந்தது எமது ஈழமண்ணில். அதை அன்றே பிடுங்கி எரிந்திருக்காவிட்டால் (இலங்கை சென்ற அன்றை இந்திய பிரதமர் ராஜிவை சிங்கள போலீஸ்காரர் தாக்கும் காட்சி) என் இனம் வாழ்ந்ததற்கே அடையாளம் தெரியாமல் போயிருக்கும்.சொந்த நாட்டில் வாழ தமிழனுக்கு வழியில்லை.


சொந்த நாட்டை மீட்கும் முயற்சிக்கு ஆதரவு தர நாதியில்லை. என் தலைவன் மட்டும்(பிரபாகரன் ) கொஞ்சம் தலை அசைத்திருந்தால், எதிரிகள் (ராஜபக்ஷே) மட்டுமல்ல... அந்த இனத்தின் சுவடுகள் கூட இல்லாமல் போயிருக்கும் ஓர் நொடியில். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது. என் தமிழ் இனத்தை விரட்டியவனின் விலா எலும்பு தெரித்திட நினைத்ததில் என்ன தவறு... ஆயுதம் எடுத்தது குற்றமா... அதர்மத்தை அழித்தது குற்றமா... அடிமைகளை விடுவித்தது குற்றமா...


தமிழனை நாதியின்றி அலைய வைத்தது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது வந்தேரிய சதிகார இனவெறி ஏகாதிபத்திய ஏகலைகளின் குற்றமா?இனி எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் (விடுதலைப் புலி கொடி) காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். இவ்வாறு அந்த 'CD'யில் உள்ளது.

Friday, April 17, 2009

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு - 100% நல்ல வேட்பாளர்

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு நன்கு படித்த இளைஞர், முற்போக்கான சிந்தனைவாதி இவரைப் போன்ற ஒரு வேட்பாளரை நாம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது நமது கடமை.

மறக்காமல் வெந்த சோத்தையே வேகவைக்காமல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இது போன்ற இளைஞருக்கு வாப்பளிக்க வேண்டும்.

அவர் என்ன செய்தார் என்ன செய்யவில்லை என்று பிறகு நாம் கேள்விகளைக் கேட்கலாம்.

அவர் செய்வார் என்று நம்புவோமாக.

இவரை மற்ற அரசியல்வாதிகளைப் போல் இருப்பார் என்று நினைக்க வேண்டாம். இவரிடம் ஒரு வித்தியாசத்தை பார்க்க முடியும்.

நான் தென்சென்னை வாக்காளனாக இருந்தால் என்னுடைய வாக்கு அவருக்குத்தான்.

தேர்தலில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

Sunday, April 12, 2009

நடிகர் ரித்தீஷ் - நல்ல வேட்பாளர் 100% ஓட்டளிக்கவும்நடிகர் ரித்தீஷ் மாதிரி வேட்பாளரை தேர்வு செய்து ஓட்டளிக்கவும் நான் சொல்வது சிரிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக.

இவர் என்னுடைய பார்வையில் நல்ல வேட்பாளர் தான். இவரால் தொகுதிக்கு பல நல்ல திட்டங்கள் வரும்.

இவர் சாதாரண நடிகராக இருக்கும் போதே நிறைய காரியங்களை மக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து செய்துள்ளார்.

நீங்க கேட்கலாம் இதெல்லாம் அவருடைய சுய நலத்திற்காக என்று ஒரு சுய விளம்பரத்திற்காக என்று?

இருக்கட்டுமே அப்படியே இருக்கட்டுமே ஏன் விளம்பரம் தேடக்கூடாதா, மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று துடிப்போடு இருக்கிற இளைஞர் அவர், ஒரு வேகத்தில் தன்னுடைய பேர் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்கிற நோக்கம் தான்.

தன்னைப் போல் எல்லா இளைஞருக்கும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும் என்று இருக்கலாமே.

இவரை போன்ற நல்ல துடிப்பான இளைஞருக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் பல உருப்புடியான நல்ல விஷயங்கள் நடக்கும்.

நான் ராமநாதபுரத்தில் இருந்தால் நடிகர் ரித்தீஷ்க்குத் தான் என்னுடைய வாக்கு.

நடிகர் ரித்தீஷ் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை கூறுகிறேன்.

Friday, April 10, 2009

கலைஞர் ஈழத்தமிழர்களின் எட்டப்பன்

இன படுகொலையே உயிர் மூச்சாக கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேவை நீ மாவீரன் அலெக்சாண்டருடன் ஒப்பிட்டு ஓலமிடுகிற ஓநாயே.

ஹிட்லரின் நாஜிப் படைகள் 6 மில்லியன் யூதர்களை கொன்று குவித்தது. அதே போல் ராஜபக்‌ஷேவின் இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கிறது.

அப்பாவி மக்கள் மீது விஷ குண்டுகளை வீசி அழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசாங்கம் கூட்டிக் கொடுத்து விளக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது.

வெட்க கேடு வேதனையான ஒரு விஷயம். இங்கிலாந்திலே தமிழர்கள் எல்லோரும் நாடாளுமன்றத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆனால் நாமோ நம் கண்முன்னால் நடக்கும் இனப் படுகொலையை பார்த்து முடம் போல் இருக்கிறோம்.

இவர்கள் அரசியல் நாடகத்தை நாமும் பார்த்து கைக்கட்டி வாய்ப்பொத்தி பார்க்கிறோம்.

ஏன் விஷ குண்டுகளை இந்திய அரசாங்கமே கூட கொடுத்திருக்கலாம்? யார் கண்டது.

உதட்டளவில் பேசுபவர் தான் கலைஞர் கருணாநிதி.

நயவஞ்சக கருணாநிதியே போதும் உன்னுடைய நாடகத்தை நிறுத்து.

உன்னை தமிழினத் தலைவர் என்றா சொல்வது.

தமிழர்களின் தீரா தலைவலி நீ.

ஓநாய்களின் ஒட்டு மொத்த கூடாராம் நீ.

ஓநாய்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர் நீ.

ஈழத்தமிழர்களின் ரத்தத்தை உறுஞ்சும் ரத்தக் காட்டேரி நீ.

கலைஞர் ஒழிந்தால் ஒழிய மக்கள் வாழ வழியில்லை.

அன்றோ கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், இன்றோ ஈழத்தமிழர்களுக்கு கலைஞர்.

சிந்திப்பீர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை

இங்கிலாந்து வெள்ளைக்கார அப்பா தன் குழந்தைக்கிட்ட நிறைய சாகச கதைகள் சொல்லுவார். அந்த குழந்தையும் சலிக்காம கேட்கும், அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கும் போது உலகம் என்றால் என்ன அப்பா? என்று கேட்டாள். அந்த அப்பாவோ உலகம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொன்னார். அது அந்தக் குழந்தைக்கு புரியவில்லை.

இந்தியா என்கிற நாடு ஒன்று இருக்கிறது. அங்க இருக்கிற மக்கள் எல்லோரும் எல்லா வசதி வாய்ப்புகளோடும் இருக்காங்க என்று சொன்னார்.

வசதிவாய்ப்புகள் இன்னா என்னப்பா?

வசதிவாய்ப்புகள் என்றால் பஞ்சு மெத்தையும், பாலும் தேனும் கலந்த சோறும்,பட்டுத் துணிகளும், தங்கம், வைரம், வைடூரியமும், மாணிக்கமும், ரத்தனமும் மற்றும் முத்துக்கள், எல்லாம் அங்கே சாதாரணமாம்.

அப்படியா அப்பா!

அந்த இந்தியா எங்க இருக்குப்பா?

அதுவா அது கடல் தாண்டி எங்கோ இருக்கிறது. அதை யாரும் பார்த்து கிடையாது கேள்விப்பட்டதோடு சரி.

இவர் போல் தான் எல்லாத் தந்தைகளும் தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி கேள்விக் கேட்டக் குழந்தை கொலம்பஸ் பிறகு இந்தியாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பி போகும் போது புயல் வீசியதில் கப்பல் ஒரு கரையை ஒதுங்கியது. அவர் கேள்வி
பட்டதை போல் அங்கே இருந்த நிலபரப்புகள் அமைப்புகள் மிகவும் அழகாகவும் மிகவும் செழுமையாகவும் இருந்தன.

அவரோ மிக்க மகிழ்ச்சியில் திளைத்து ஆகா நான் இந்தியாவை கண்டு பிடித்துவிட்டேன் என்று ஆனந்த களியாட்டம் போட்டார். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சிவப்பு நிறமாக இருந்ததனால் அவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்தார்.

பின்னாளிலே தெரிய வந்தது அவர் கண்டுபிடித்து இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்று.இப்படியே பிரெஞ்சுக் காரரும் அமெரிக்காவை கண்டுபிடித்திருந்தனர் அதனால் பிரெஞ்சுக்காரர்களும் தனக்கு அமெரிக்காவை சொந்தங்கொண்டாடினர்.
போர்ச்சுகீசியர்களும் அமெரிக்காவை சொந்தங்கொண்டாடினார்கள்.

அமெரிக்காவின் பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்கள் அவர்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தனர்.

இங்கிலாந்தும், பிரெஞ்சுகாரர்களும் மற்றும் போர்ச்சுகீசியர்களும் தங்களது நாட்டில் இருந்து வந்து குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்.

இதிலிருந்து தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் அமெரிக்காவை பங்குபோட நினைத்து போராட்டத்தை ஆரம்பித்தார்கள் அல்லது மற்ற நாட்டவர்களைத் தாக்க முற்பட்டார்கள்.

இங்கிலாந்தியர்களின் குடியேற்ற நிலபரப்பை ஆக்கிரமித்து கொண்டே சென்றனர் பிரெஞ்சுக்காரர்களும், போர்சுகீசியர்களும். இவர்களுக்கிடையில் சண்டை
முற்றிக்கொண்டே சென்றது.

அதனால் அதை தடுத்து நிருத்த ஆங்காங்கே பல ராணுவதுருப்புகளை ஏவிட்டது இங்கிலாந்து அரசு.

அதில் குறிப்பிடத்த படையை ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.

நிறைய தோல்விகளும் ஒரு சில வெற்றிகளும் அவருக்கு கிடைத்தது.

இப்படி இங்கிலாந்தில் இருந்து ஆணை வரும் அதை அமெரிக்காவில் குடிபெயர்ந்த இங்கிலாந்தியர்கள் செய்ய வேண்டும். குடியேற்றம் பெற்ற இங்கிலாந்தியருக்கென்று தனி
சுதந்தரமும்,உரிமையும் கிடையாது. எது வேண்டுமானாலும் இங்கிலாந்து அரசிடம் தான் கேட்டுப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.இவர்களுக்கு வேண்டிய சீர்திருத்தங்களை பரிசீலித்து இங்கிலாந்திற்கு அனுப்பினாலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டே வந்தன.ஆனாலும் இங்கிலாந்து நாடாளுமன்றம் எந்த சட்ட திட்டத்தை இயற்றுதோ அந்த சட்டத்திட்டத்தை அவர்கள் ஏற்று மதித்து நடந்து வந்தார்கள். இருந்தாலும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உரிமைகளைக் கூட இங்கிலாந்து அரசாங்கம் மறுத்தும், நிராகரித்தும் வந்தது.

நாள்பட நாள்பட அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருந்தது. பதிமூன்று மாகாணங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கூடி ஒரு முக்கியமானத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இனிமேல் இங்கிலாந்து அரசாங்கம் இயற்றும் சட்டதிட்டத்தை மதிப்பதில்லை என்றும், தங்களுக்கென்று பலமான ராணுவத்தை அமைப்பதென்றும்.

தயாரானது அமெரிக்க ராணுவம் அதற்கு தலைமை ஏற்று நடத்த ஜார்ஜ் வாஷிங்டனை நியமித்தார்கள். இங்கிலாந்தில் இருந்து படைகள் வந்திறங்கின. சங்கொலி முழங்க போர் ஆரம்பம் ஆனது குடியேற்ற அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்துக்கும்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நடந்த அமெரிக்கப் போர், 1783-ம் ஆண்டு வெர்செயில்ஸ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அமெரிக்க சுதந்தரத்தை அங்கீகரித்தது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான எல்லை வரையறுக்கப்பட்டது.

அமெரிக்க சுதந்தரப் போர் முடிவுக்கு வந்ததும் வாஷிங்டன் மிகத்தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார். நமக்கு முன்னால் ஒரு பெரிய கடமை காத்திருக்கிறது. நமக்காக ஒரு நாடு கிடைத்துவிட்டது. போரில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஒற்றுமையாகப் பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கை எல்லா மக்களுக்கும் இருக்கிறது. அதே நம்பிக்கையை மக்களிடமிருந்தது பெறவேண்டும் என்றால் எல்லா மாகாணங்களும் ஒன்றுபட்டு ஒரே அரசாக, அதே சமயம் மக்கள் அரசாக மாறவேண்டும் என்றார்.

1789-ல் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டத்தின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அமைச்சர்களின் உதவியோடு ஜனாதிபதி ஆட்சி செய்வார்.

சட்டங்களை இரண்டு குழுக்கள் உருவாக்கும். ஒன்று குடியேற்ற நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு. இந்தக் குழுவைத் தான் “செனட்” என்று அழைப்பார்கள். இன்னொரு குழு, மக்களால் ஓட்டுப் போட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, நம்ம ஊர் சட்ட மன்றம் மாதிரி. செனட் சபையில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து செனட் சபைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த இரண்டு சபைகளுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரமும், நிதி நிலைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இருந்தன.

இப்படி அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். புதிய அரசியலமைப்புச் சட்டங்களைக் கொண்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.

“வாஷிங்டன் தான் ஜனாதிபதியாக வேண்டும்” என்று குரல் நாடு முழுக்க வலுத்துக்கொண்டே போனது. வாஷிங்டனுடன் போரில் பங்கெடுத்திருந்த கர்னல் லீ விரிவாக வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “எந்த காரணத்தைச் சொல்லியும் நீங்கள் ஜனாதிபதியாகிற வாயப்பை மறுத்துவிடாதீர்கள். குறிப்பாக, உங்களுடைய தனிப்பட்ட பண்ணை வாழ்க்கைக்காக, நாடு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

1789, ஏப்ரல் 14. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான ஆணையை அவருக்கு அனுப்பியது. அந்த அழைப்பை வாஷிங்டன் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அது அமெரிக்க காங்கிரஸின் அழைப்பல்ல, அமெரிக்க மக்களின் அழைப்பு.

1789 ஏப்ரல் 30-ம் தேதி வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

பலத்துறைகளில் தன்னுடைய முழுபலத்தையும் கொடுத்து அமெரிக்காவை கட்டமைத்தார்.

இப்படி பல விஷயங்களை கொடுத்து மிக அழகான நடையில் எழுதி இருக்கிறார் ஆசிரியர் பாலுசத்யா.புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Friday, April 3, 2009

நடிகர் S. S. சந்திரன் ஒரு மாமாவா, நடிகர் சந்திரசேகர் கம்யூனிஸவாதியா

கூட்டுப் புழுக்கள்:


இந்தப் படத்தை நான் சிறுவயதிருக்கும் போது கிட்டதட்ட 2 அல்லது 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டியிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் முதல் முறையாக பார்க்கும் போது. அப்பொழுதெல்லாம் படம் என்றால் என்ன என்று அந்த வயதில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் நானும் கதையோடு ஒன்றி கதாப் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் சிரித்தால் சிரிப்பதும், அவர்கள் அழுதால் நாமும் அழுவதும், அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நாம் கஷ்டப் படுவததை போல் உணர்வோம்.

அந்த உணர்வு நேற்று படம் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது ஏனென்றால் நான் படத்தில் முழுவதுமாக லயித்துவிட்டேன் என்று சொல்வதை விட இயக்குனரின் கதை மற்றும் திரைக்கதை மிக அருமையாக இருந்தது.


நேற்று ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் கூட்டுப் புழுக்கள் என்ற படம் பார்த்தேன்.மிகவும் அருமையான படம் அது. ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் இயக்குனர் ஆர்.சி. சம்பத் செதுக்கி இருக்கிறார். அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிக அற்புதமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

முடிந்தால் எல்லோரும் பாருங்கள்.

முடிந்தவரை இயக்குனர் அவர்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.

குடும்பம், அரசியல், உறவுகள், பாசம், காதல், சோகம், சந்தோஷம், காதல் தோல்வி, கம்யூனிஸம்.


இங்கு ஒரு கதாப் பாத்திரத்தில் வரும் சம்பவத்தை சொல்ல ஆசைப் படுகிறேன்:


அந்தப் படத்தில் வரும் ஒரு குடும்பத்தில் அப்பா மாதம் ஒவ்வொரு முறையும் ஏதாவது வேசி கிட்ட போவார்.அதற்கு ஒரு இடைத்தரகர் ஒருவர் இருப்பார்.
(இதில் அப்பா கதாப்பாத்திரமாக S.S. சந்திரன் )

இந்த மாதம் அந்த இடைத்தரகர் வந்து நல்ல அழகான கல்லூரிப் பெண் இருக்கிறார்கள் வாங்க என்று கூப்பிடுவார் அவரும் வருவார் பார்த்தால் அவருடைய மகள்.

இங்கு இருவருக்குமிடையே ஏற்படும் குற்றவுணர்வுகளை மிக அழகாக நேர்த்தியாக காட்டியிருப்பார் இயக்குனர் அவர்கள்.

அடுத்த சீன்களில் அப்பாவுக்கும் மகளுக்கும் வசனமே இருக்காது இருவரும் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் ஆனாலும் சுகமான முடிவை தந்து இருப்பார்.

இதில் இடதுகை சந்திரசேகர் கம்யூனிஸவாதியாக நடித்திருப்பார்.

இப்படி ஐந்து குடும்பங்கள் வாழ்கின்றன, ஒரே காம்பவுண்டுக்குள்.

ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் இருக்கும் பிரச்சனைகளையும் மிகவும் அழகாக சொல்லியிருப்பார்.

அதில் குறிப்பாக யாரையும் நாயகன் நாயகி என்று சொல்ல முடியாது.நடித்த எல்லோரும் நாயகர்கள் எல்லோருமே நாயகிகள்.

முழுமைப் பெற்ற படம் அது.

அதில் நடித்த நடிகர்கள்

ரகுவரன்
அமலா
இடக்கை சந்திரசேகர்
S.S. சந்திரன்
C.I.D. சகுந்தலா
தீபா
சாருகாசன்
ஸ்ரீகாந்த்
ராதாரவி
சரிதா
கோபால கிருஷ்ணன்

Monday, March 30, 2009

காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மூன்றாவது கூட்டணியின் தேர்தல் அறிக்கை

ஏன் இருக்கக் கூடாது இதுபோன்ற தேர்தல் அறிக்கைகள்? ஏன் தருவதில்லை எந்த ஒரு அரசியல் கட்சிகளும்?

1. அனைவருக்கும் கட்டாயக் கல்வி குறைந்தது 12ஆம் வகுப்பு வரை.
2. சமச்சீர் கல்வி மற்றும் தரமான ஆசிரியர்களை நியமித்தல்.
3. மும்மொழிக் கொள்கை.
4. சீரான இட ஒதுக்கீடு.
5. இந்த இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுதல்.
6. பள்ளி என்று எடுத்துக்கொண்டால் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்க உத்தரவாதம் அளித்தல்.
7. விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ச்சி திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயித்தல்.
8. விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டியைக் குறைத்து அதிக தொகைகள் கொடுக்க ஏற்பாடு செய்தல்.
9. பயிர்களுக்கான காப்பீட்டு முறையை அறிமுகம் செய்தல்.
10. விவசாயிகளுக்கு இலவச காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்துதல்.
11. பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுத்தல்.
12. பஞ்சாயத்து அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க ஒரு மக்கள் குழுவை அல்லது வெளிப்படையான நிர்வாகத்தை அமைத்தல்.
13. மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் மற்றும் கிராமங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கைகள் எடுத்தல். (இதன் மூலமாக மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வது குறையும்).
14. கிராமங்களுக்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்தல்.
15. கிராமங்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க கிராமங்கள்தோறும் சட்ட ஆலோசனை மையங்களை அமைத்தல்.
16. குடும்பக் கட்டுபாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
17. சுகாதார மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து, நவீன மையமாக்குதல்.
18. மக்களுக்கு நீதிக் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதத்தை குறைத்தல்.
19. பெண் சிசுக்கொலையை தடுத்தல்.
20. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளித்தல்.
21. கலப்பு திருமணங்களை ஊக்குவித்தல்.
22. மதத்தின் பெயரால் தூண்டப்படும் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குதல்.
23. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
24. தேவையான போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல்.
25. தடைபடாத மின்சாரம் வழங்க உத்திரவாதம் அளித்தல்.
26. அனைத்து அரசு இயந்திரங்களையும் நவீன மையமாக்க நடவடிக்கை எடுத்தல்.
27. நாட்டின் உளவு அமைப்பை பலப்படுத்துதல்.
28. நாட்டின் உள்கட்டமைப்புகளை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
29. ஒவ்வொரு ஆண்டும் சரியான இலக்கு நிர்ணயித்து செயல்படுதல்.
30. தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அடுத்த 50 மற்றும் 100 ஆண்டுகளுக்குள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயம் செய்து, வேண்டிய திட்டங்களை தீட்டிச் செயல்படுதல்.

Sunday, March 29, 2009

தேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா !

பா.ம.க,. - 7
1. ஸ்ரீபெரும்புதூர்
2. அரக்கோணம்
3. திருவண்ணாமலை
4. கள்ளக்குறிச்சி
5. சிதம்பரம்
6. புதுச்சேரி
7. தருமபுரி


தி.மு.க., - 21
1. திருவள்ளூர்(தனி)
2. வடசென்னை
3. தென்சென்னை
4. மத்திய சென்னை
5. ஸ்ரீபெரும்புதூர்
6. அரக்கோணம்
7. கிருஷ்ணகிரி
8. தர்மபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. நாமக்கல்
12. நீலகிரி(தனி)
13. பொள்ளாச்சி
14. கரூர்
15. பெரம்பலூர்
16. நாகை(தனி)
17. தஞ்சை
18. மதுரை
19. ராமநாதபுரம்
20. தூத்துக்குடி
21. கன்னியாகுமரி


காங்கிரஸ் - 16
1. காஞ்சிபுரம்(தனி)
2. ஆரணி
3. சேலம்
4. ஈரோடு
5. திருப்பூர்
6. கோவை
7. திண்டுக்கல்
8. திருச்சி
9. கடலூர்
10. மயிலாடுதுறை
11. சிவகங்கை
12. தேனி
13. விருதுநகர்
14. தென்காசி(தனி)
15. நெல்லை
16. புதுச்சேரி


விடுதலைச் சிறுத்தைகள் - 2
1. விழுப்புரம்(தனி)
2. சிதம்பரம் (தனி)


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
1. வேலூர்

நேரடிப் போட்டி பா.ம.க மற்றும் காங்கிரஸ்:

புதுச்சேரி

நேரடிப் போட்டி பா.ம.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்:

சிதம்பரம்

நேரடிப் போட்டி பா.ம.க மற்றும் தி.மு.க:

1. ஸ்ரீபெரும்புதூர்
2. அரக்கோணம்
3. கள்ளக்குறிச்சி
4. திருவண்ணாமலை
5. தருமபுரி

நேர்மைக்கும், பணபலத்திற்கும் இடையே போட்டி:

அரக்கோணம் தொகுதி முன்னால் இரயில்வே இணை அமைச்சர் வேலுவுக்கும், தி.மு.க வில் இணைந்த ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும் இடையே இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

பார்ப்போம் இந்த தொகுதியை வெற்றி பெறுவது பணமா நல்ல குணமா என்று !

Thursday, March 26, 2009

சாணக்கியர் கலைஞரின் பிரித்தாளும் சூழ்ச்சி

ம.தி.மு.க

ம.தி.மு.க வின் தூண்கள் என்று சொல்லப்பட்டு வந்த L. கணேஷனும், செஞ்சி ராமச்சந்திரனும் கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது ம.திமு.க, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து போர்க் கொடித் தூக்கி தோற்றுப் போனார்கள்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் கொண்டார் அரசியல் சாணக்கியர் கருணாநிதி. நீர் பூத்த நெருப்பாக ம.தி.மு.க பொதுசெயளாலர் வைகோ விற்கும் செஞ்சி மற்றும் கணேஷனுக்கும் இடையே இருந்த பிரச்சனையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.

இழுத்து கொண்டாலும் பரவாயில்லை ம.தி.மு.க வை ஒன்றுமில்லாமல் ஒழிக்க அவர்பட்ட பாடு இருக்கிறதே அது பெரிய கதை.

ம.தி.மு.க விலிருந்து வெளியே வந்தவர்களை அப்படியே தி.மு.க இணைப்பதற்கு பதிலாக அவர்களை வைத்து செய்த கூத்து உலகில் வேறெங்கும் நடக்காது.

செஞ்சியும், கணேசனும் உண்மையான ம.தி.மு.க நாங்கள் தான் என்றும் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்களும்,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் அதனால் கொடி மற்றும் கட்சியின் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையித்திடம் புகார் கொடுத்தார்கள்.

செஞ்சியும், கணேசனும் சேலத்தில் பொதுக்குழுவை கூட்டி அதில் நிரூபிப்போம் என்றனர். ஆனாலும் அவர்கள் பொதுக்குழு கூடும் நாளை அறிவித்தார்கள். பொதுக்குழு நடைபெறும் நாளான்று அவர்கள் பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே வேறெப்போதும் அவர்களது வாழ்க்கையில் பட்டது கிடையாது. அவர்களாவது பரவாயில்லை வீரபாண்டி ஆறுமுகம் பட்டப் பாடு இருக்கிறதே அவ்வளவு பாடு. தி.மு.க காரர்களையெல்லாம் ம.தி.மு.க கரை வேஷ்டி கட்டி பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் "செஞ்சியும், கணேஷனும் காலை 11 மணி வரை பொதுக்குழு கூடும் மண்டபத்திற்கே வரவில்லை என்றால் பாருங்கள்.ஏன் வழி நெடுக தொண்டர்களின் கூட்டமா" என்றால் அது தான் இல்லை. "அன்று காக்கை, குருவி எல்லாம் பறக்கவில்லையாம்". ஏன் என்று கேட்டால் அந்தப் பக்கம் பறந்தால் ம.தி.மு.க வின் பொதுக்குழு உறுப்பினர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து தன் கூடுகளிலே அடைந்து கிடப்பதாக சொன்னதாம்.

இப்படி சாணக்கியத் தனம் செய்து ம.தி.மு.க வை உடைக்கப் பார்த்தார் கலைஞர் அவர்கள். ஆனாலும் அன்று நடந்த அவமானத்திற்கு பிறகு அவர்கள் போட்டி ம.தி.மு.க என்று அறிவித்து செயல்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் தி.மு.க வில் இணைந்தார்கள். இருந்தாலும் அவர்களுக்கு இந்த முறை தி.மு.க வில் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து,

ம.தி.மு.க வின் முன்னால் அவைத்தலைவரும் இன்னால் தி.மு.க வின் உறுப்பினருமான கண்ணப்பன்.

கண்ணப்பனைத் தொடர்ந்து கம்பன் ராமகிருஷ்ணனும் ம.தி.மு.க விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பா.ம.க:

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தி.மு.க கூட்டணியில் சேருமா சேராதா என்ற நிலையில், ஒரு வேளை சேராத பட்சத்தில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெற அல்லது வன்னியர்களின் ஓட்டுக்களை சிதறடிக்க வன்னியர் அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க ஏற்பாடு செய்தார்.

இத்தனை நாட்களாக செய்யாமல் இப்பொழுது அதை தூசுத் தட்டி பா.ம.க விற்கு கிலியை ஏற்படுத்தினார்.

வன்னியர்கள் எல்லாரும் டாக்டர் ராம்தாசின் பின்னால் போகமல் தடுக்க அவர் மெனக்கெட்டதை போல் வேறுயாரும் மெனக் கெட்டதுகிடையாது.

தேர்தல் நேரத்தில் எப்பொழுதும் அவருக்கு நினைவுக்கு வருபவர்கள், திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய மற்றும் இதிகாசங்களுக்கு மறுவடிவம் கொடுத்திட்ட தமிழ் ஐயா ஜெகத்ரட்சகன் மற்றும் தேசிய அரசியலில் பொதுவாழ்வில் தன்னையே தானம் செய்த வாழப்பாடி சுகந்தன் நினைவுக்கு வருவார்கள்.

வாழப்பாடி ராமமூர்த்தி இருந்த வரைக்கும் கலைஞர் அவர்கள் ராமதாஸுக்கும், வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இடையே சீனப்பெருஞ் சுவர்போல் இருந்து நட்பினை வளரவிடாமல் பார்த்துகொண்டார்.

அதே போல் இப்பொழுது எனது தம்பி என்று செல்லமாக ராமதாசால் அழைக்கப்படும் தொல் திருமாவளவனை அவருக்கு எதிராக களமிறக்க சூழ்ச்சி செய்து மீண்டும் புகையை போட ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் திருமாவும், ராமதாசும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞரின் அரசியல் சூழ்ச்சிக்கும் நயவஞ்சகத்திற்க்கும் ஆளாகமல் இருக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் நாளுக்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே வருகிறது.

Tuesday, March 24, 2009

கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதம் 25 கிலோ அரிசி, தலித் மற்றும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி,வங்கியில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை போன்றவை வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. பாமர மக்கள் நலன் குறித்து அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை:

1. லோக்சபா மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 15வது லோக்சபாவில் இதுதொடர் பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும். அதனால், 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபாத் தேர்தலில், பெண்கள் 33 சதவீத அளவுக்கு போட்டியிடுவர்.
2. வீடில்லாதவர்களும், இடம் பெயர்ந்து வருவோரும் நகரங்களில் மானிய விலையில் உணவைப் பெறும் வகையில், சமுதாய சமையல் அறைகள் அமைக்கப்படும்.
3. நகரங்களிலும், கிராமங்களிலும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் ஒன்றுக்கு 25 கிலோ உணவுதானியம் வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், உணவு உரிமைச் சட்டம் இயற்றப்படும்.
3. ஆதிவாசி மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.
4. வங்கிகளில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.
5. அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாட வகுப்பில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் மற்றும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையோ அல்லது கல்விக் கடனோ வழங்கப் படும். இந்தக் கல்வி கடன் எந்தவிதமான நிபந்தனை உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும்.
6. சாதாரண மக்கள் நிவாரணம் பெறும் வகையில், மிதமான வகையில் சேவை வரிகள் விதிக்கப்படும்.
7. வரும் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், "பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,)' அறிமுகப் படுத்தப்படும்.
இந்த வரி அமலுக்கு வந்து விட்டால் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப் படும் இதர வரிகளான "வாட்,' கலால் வரி, சேவை வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். இதனால், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
8. இளைஞர்களும், இளம் பெண்களும் (18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள்) நாட்டின் தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில், அவற்றில் அனுபவம் பெறும் வகையில், பயிற்சித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் தப்படும். இதன்மூலம் அவர்கள் மிகுந்த பலன் பெறலாம்.
9. காங்கிரஸ் கட்சி மட்டுமே அகில இந்திய அளவில் பரவியிருப்பதோடு, அகில இந்திய அளவிலான பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு செயல் படுகிறது.
ஐந்து ஆண்டு கால பதவிக்காலத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும்.
10. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குறைவான பணவீக்கத்துடன் உயரிய பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் படும்.
11. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, விளைப் பொருட்களை விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கொள்முதல் செய்யும் முறை துவக்கப்படும்.
12. நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நீதித்துறை சீர்திருத்தம் தொடரும். போலீஸ் துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
13. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
14. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஜனநாயக மயமாக்கப்படும்.
15. எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு தொடரும்.
16. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமும் அகண்ட அலைவரிசை இணைப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும்.
17. ஏழைக் குடும்பங்கள் அனைத்திற்கும் சுகாதார காப்பீடு திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
18. நடப்பு 2008-09ம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலைமை நீடித்தது. இருந்த போதிலும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு அறிவித்த சலுகைத் திட்டங்களால் அடுத்த சில வாரங்களில் பலன் கிடைக்கும்.
19. ஆண் - பெண் எண்ணிக் கையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சரிக்கட்ட பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப் படும். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதும் உறுதி செய்யப் படும்.
ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவிகளுக்குப் பண உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வரவு வைக்கப்படும்.
20. இந்திய தேசிய காங்கிரஸ் நான்கு "இசங்களை' எதிர்க்கிறது. நாட்டை நாசமாக்கும் மொழிவெறி, மாநில வெறி, சாதி வெறி, மதசம்பந்தப்பட்ட எல்லாவித வெறி ஆகியவற்றை எதிர்க்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, March 23, 2009

இந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்


இந்தியப் பிரிவினை ஜின்னாவின் தொலை நோக்குப்பார்வையிலும் சரி என்னுடைய பார்வையிலும் சரி நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியானதே.

காந்தி பல விஷயங்களில் கொஞ்சம் கோணலாக சிந்திப்பவர்தான். அவர் இதற்கும் விதி விலக்கல்ல.

ஜின்னா அன்று செய்த மாபெரும் நல்லக் காரியம் இந்தியப் பிரிவினை. அவர் அவ்வாறு யோசித்ததனால் தான் இந்தியாவில் நாம் இன்று நிம்மதியாக வாழ்கின்றோம் இல்லையென்றால் இப்பொழுது பாகிஸ்தானில் எவ்வாறு பயங்கரவாதம் படுக்கை போட்டுக் கொண்டு பல்லிளிக்கிறதோ அதே போல் இந்தியா முழுதும் பரவி நாட்டை சீரழித்திருக்கும்.

இதனால் நாம் ஜின்னாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னா நினைத்தது வேறு ஆனால் பாகிஸ்தானில் இப்பொழுது நடப்பது வேறு. உலக அரங்கில் முஸ்லீம் ஆகிய நாம் தனித்துவம் பெறவேண்டும் என்பதற்காக பிரிவினையை மேற்கொண்டார். ஆனால் சுதந்திரம் பெற்றப் பிறகு வெகு சில காலங்களிலே அவர் இறந்த கரணத்தால் அவருடை சிந்தனைகள் இன்றளவும் செயல் வடிவம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றாளவும் அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கு முக்கியத்துவம் தந்து உள்கட்டமைப்பை சீரமைத்து சிறந்த வெளியுறவு கொள்கைளை வகுத்து வருங்கால சந்ததியினருக்கு நன்மை எதுவும் அவர்கள் சேர்க்கவில்லை. அவர்கள் அதற்கு மாறாக வன்முறையைத்தூண்டி தவறான பாதையில் தான் அவர்கள் வழி நடத்திச் செல்கிறார்கள்.

அதே போல சக்திகள் நம்முடைய நாட்டிலும் இருக்கிறது R.S.S, V.H.P ஆனலும் அவர்களின் பாட்ச்சா இங்கு பலிக்கவில்லை.மூளைச்சலவை செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர்களை திசை திருப்ப பார்த்தார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்தால் அது பயங்கவாதத்தில் தான் கொண்டுபோய் முடியும் என்ற உதாரணம் பாகிஸ்தான் தான்.

இவர்கள் தோல்வி அடைந்ததிற்கு காரணம் ஹிந்துத்வாவை எதிர்த்த இந்துக்களினால் தான்.

இனிமேலும் மதத்தின் பெயரில் மக்களைத்தூண்டுவதை மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முதல் அத்தியாயமே நம்மை பதைபதைக்க வைக்கிறது. ரயில் வந்து நிற்க்கிறது, ஆனால் யாரும் இறங்கவில்லை, ஏனென்றால் யாருமே உயிருடன் இல்லை. ரயில் முழுவதும் இறந்த உடல்கள் சிதறி கிடக்கின்றன. இப்படி ஒரு பிரிவினை நடந்திருக்கிறது என்று நினைக்கும்போது மனம் வேதனையில் ஆழ்கிறது.

நாம் எல்லோரும் இப்பொழுது இந்தியச் சுதந்ததிர தினத்தை கொண்டாடும் அதே தினத்தில் 1947-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்ததிர தினத்தை கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே!

காந்தி தன்னால் இயன்ற அளவிற்கு போராடிப் பார்த்திருக்கிறார். பேச்சுவார்த்தை, உண்ணாவிரதம், உயிரை பணயம் வைத்து வன்முறை நடைபெறும் இடத்திற்கே சென்று சமாதானம் செய்வது என்று தன்னால் முடிந்த அளவிற்கு முயற்ச்சித்திருக்கிறார்.

கத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்றோம் சுதந்ததிரம் என்று பெறுமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அப்படி பெற்ற சுதந்ததிரத்திற்க்காக மிகப் பெரிய விலையை இந்தியா கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

பிரிவினை நடைப்பெற்ற அனைத்து இடங்களிலும் இந்து, முஸ்லீம் இரண்டு தரப்பிலும் பலத்த உயிரிழப்பு, ஏன்? எதற்கு? என்று நம்முள் கேள்விகள் மோதுகின்றன. அதற்க்கான விடையாக அடுத்தடுத்த பிளாஷ் பேக் அத்தியாயங்கள்.

அனைத்து மதங்களும் ஒரே கடவுளை நோக்கியே அழைத்துச் செல்கின்ற என்று பல யுகங்களாக பல பெரியோர் கூறியிருந்தும் அதை காதால் கேட்டும் மனதால் அவற்றை நம்ப மறுப்பதே இன துவேஷத்திற்கு காரணமாக அமைகிறது.

ஒன்றாக இருந்த இந்து, முஸ்லீம் இடையே ஏற்ப்பட்ட இந்த பிரிவினைக்கான ஆணிவேராக மதம் சுட்டிக்காட்டப்படுகிறது. இரு தரப்பினருக்கும் உணவிலிருந்து, கடவுள் வரை வேவ்வேறு பழக்க வழக்கங்கள். இருநதாலும் இரு தரப்பினரும் சேர்ந்து வாழ முடியும் என்ற காந்நிதியின் வாதத்தை ஜின்னா கட்டாயமாக மறுக்கிறார்.

காந்தியின் வாதத்தை உடன் இருக்கும் நேருவும், படேலும் கூட ஏற்றக் கொள்ளவில்லை எனும்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிரிவினை நேராமல் தடுக்கும் பொறுட்டு மவுண்ட்பேட்டன், ஜின்னாவுடன் சேர்ந்து நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிகின்றன. பாகிஸ்தான் வேண்டும் என்ற உறுதியாக இருந்தார் ஜின்னா.


இந்தியப் பாகிஸ்தான் பிரிக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளும் பீரிட்டீஷ்காரரான ராட்கிளிஃபுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது இந்திய எல்லைகளை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவரிடம் இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கான பணி ஒப்படைக்கப்படுகிறது.

இரண்டே மாதங்களே இருக்கின்றன என்னால் எப்படி இதைச் செய்ய முய்ய முடியும் என்று மவுண்ட்பேட்டனிடம் கேட்கிறார். மவுண்ட்பேட்டனோ என்ன ஆனாலும் பரவாயில்லை கோடு போட்டுக் கொடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

அவர் இழுக்கப்போகும் கோடு எத்தனை காடு, மலை, ஆறு, கட்டிடங்கள், நிலங்கள், இவையனைத்திற்க்கும் மேலாக மனிதர்களின் இதயங்களைப் பிளக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும் கோடுப் போடுகிறார்.

ஒரு கிராமத்திற்க்கு நடுவே ஒரு கோடு இழுக்கப்பட்டிருந்தது. உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா பின் பக்கம் வந்தால், பாகிஸ்தான்.

பிரிட்டீஷ் அரசோ, புதிதாக அமையப்போகும் இந்திய அரசாங்கமோ பிரிவினைக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்படமால் போனது துரதிர்ஷ்ட்டமே.

ஒரு வீட்டை காலி செய்ய வேண்டுமென்றால்க்கூட நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து இங்கிருப்பவர்கள் அங்கு போகவேண்டும் அங்கிருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் எவ்வளவு நாட்கள் மாதங்கள், வருடங்கள் தேவைப்பட்டிருக்கம், ஆனால் இங்கோ வெறும் சில நாட்களிலேயே பிரிவினை முடிந்து விடுகிறது.

அதற்க்கான விலை மிகவும் பயங்கரம் பெண்கள், குழந்தைகள் என்று எத்தனை அப்பாவி ஜீவன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

பாகிஸ்தானைப் பிரித்துக்கொண்டு போன ஜின்னாவிற்க்கு உடல் நிலை சரியில்லாமல் போக காஷ்மீரில் சென்று ஓய்வெடுக்க நினைத்து அதற்க்கான ஏற்ப்பாடு செய்யும்போது காஷ்மீர் மன்னர் அதற்கு அனுமதி மறுக்கவே, மனிதருக்கு வருகிறது கோபம். அந்தக் கோபத்தின் விளைவு இன்றளவும் இந்திய - காஷ்மீர் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஜின்னா தனக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை கௌரவ பிரச்சனையாக எடுத்துகொண்டு காஷ்மீரை அடைய குறுக்கு வழியை மேற்க்கொள்ளும்போது அவரிடம் நமக்கு இருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விடுகிறது.


பிரிவினைக்குப் பிறகு இநதியாவின் நிலை பரவாயில்லை தட்டுத் தடுமாறி இன்று உலக அளவில் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் நிலையோ பத்திரிக்கையில் படிக்கிறோமே பிறந்த குழந்தையை அநாதையாக குப்பைத் தொட்டியில் கிடந்தது என்று அதுப்போல ஜின்னாவும் பாகிஸ்தானை அநாதையாக நடுத்தெருவில் விட்டு சென்றார். அது இன்றளவும் அப்படியே இருக்கிறது.புத்தகத்தின் குறைகள் :

நிறைய அத்தியாயங்கள் முடிக்கவேண்டுமே என்கிற கட்டாயத்தில் சுருக்கி எழுதியிருக்கிறார்.

ஒரு சில அத்தியாயத்தில் சில பத்திகள் சற்று ஒன்றுகொன்று தொடர்பில்லாதவையாக இருக்கிறது.

இவருடைய வேறெந்த புத்தகத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்துப் பிழைகள்.

இந்திய பிரிவினை புத்தகத்தில் முழுமைப் பெறவில்லை.

புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.