தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணிகளில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
தேர்தலை அமைதியான முறையில் நடத்திட அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதனால், விதிமுறை மீறல்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் என்னென்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
* பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண்டும் வகையில் பேசினாலோ அல்லது இறையாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற்றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
* பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டினால், தமிழ்நாடு, பொது இட சீர்குலைப்பின் பிரிவு- 2-4(ஏ) ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
* பிரசார மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்களை கட்சிகள் வினியோகிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-171.(பி) ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
* வாக்காளர்களுக்கு உணவு மற்றும் மது வினியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-123, 151 மற்றும் 135.(சி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குறைந்த கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
* பிரசாரத்தின் போது வெளியிடப்படும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிட்டால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-127.(ஏ) ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
* தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி சீட்டு பெற்று, அதை வாகனத்தின் முன் ஒட்டியிருக்க வேண்டும். மீறினால், இந்திய தண்டனை சட்டம், பிரிவு-171.(எச்) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
* தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தாலோ அல்லது வேறு விதமான குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு- 171.(டி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
* தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் வரும், ஏப்ரல் மாதம் 11ம் தேதி மாலை 5மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது, பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-126 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
* வாக்குப்பதிவு தினத்தன்று கட்சிகளால் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும். இதை, மீறுபவர்கள் மீது பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-130 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Thursday, March 24, 2011
Wednesday, March 23, 2011
காங்கிரஸ் 63 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆலந்தூர் தொகுதியில் காயத்திரி தேவி போட்டியிடுகிறார். வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம் :
1. திருத்தணி- சதா சிவலிங்கம்
2. பூவிருந்தவல்லி (தனி) –
3. ஆவடி - ஆர். தாமோதரன்
சென்னை மாவட்டம் :
4. திரு.வி.க.நகர் (தனி) - சி.நடேசன்
5. ராயபுரம் - ஆர். மனோ
6. அண்ணா நகர் - வி.கே. அறிவழகன்
7. தியாகராயநகர் - செல்வகுமார்
8. மைலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு
காஞ்சீபுரம் மாவட்டம் :
9. ஆலந்தூர் - காயத்திரி தேவி
10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா
11. மதுராந்தகம் (தனி) - ஜெயக்குமார்
வேலூர் மாவட்டம் :
12. சோளிங்கர் - அருள் அன்பரசு
13. வேலூர் - ஞான சேகரன்
14. ஆம்பூர் - ஜே. விஜய இளஞ்செழியன்
கிருஷ்ணகிரி மாவட்டம் :
15. கிருஷ்ணகிரி - ஹெசினா சயித்
16. ஓசூர் - கோபிநாத்
திருவண்ணாமலை மாவட்டம்:
17. செங்கம் (தனி) - செல்வ பெருந்தொகை
18. கலசப்பாக்கம் - சி.எஸ். விஜய குமார்
19. செய்யார் - எம்.கே. விஷ்ணுபிரசாத்
விழுப்புரம் மாவட்டம் :
20. ரிஷிவந்தியம் - சிவராஜ்
சேலம் மாவட்டம்
21. ஆத்தூர் (தனி) - அர்த்த நாரி
22. சேலம் வடக்கு - ஜெயபிரகாஷ்
நாமக்கல் மாவட்டம் :
23. திருச்செங்கோடு - ஆர்.எம்.சுந்தரம்
ஈரோடு மாவட்டம் :
24. ஈரோடு மேற்கு - யுவராஜ்
25. மொடக்குறிச்சி - பழனிசாமி
திருப்பூர் மாவட்டம் :
26. காங்கேயம் - விடியல் எஸ். சேகர்
27. அவினாசி (தனி) - ஏ.ஆர். நடராஜன்
28. திருப்பூர் தெற்கு -
நீலகிரி மாவட்டம்
29. உதகமண்டலம் - கணேசன்
கோவை மாவட்டம்
30. தொண்டாமுத்தூர் -எம்.எஸ்.கந்தசாமி
31. சிங்காநல்லூர் -மயுரா ஜெயகுமார்
32. வால்பாறை (தனி) - கோவை தங்கம்
திண்டுக்கல் மாவட்டம் :
33. நிலக்கோட்டை (தனி) - ராஜாங்கம்
34. வேடசந்தூர் - தண்டபானி
கரூர் மாவட்டம் :
35. கரூர் - ஜோதி மணி
திருச்சி மாவட்டம் :
36. மணப்பாறை -டாகர். சுப. சோமு
37. முசிறி - எம். ராஜ சேகரன்
அரியலூர் மாவட்டம் :
38. அரியலூர் - பாலை தீ அமரமூர்த்தி
கடலூர் மாவட்டம்:
39. விருதாசலம் - நீதிராஜன்
நாகை மாவட்டம் :
40. மயிலாடுதுறை - எஸ். ராஜ்குமார்
திருவாரூர் மாவட்டம்
41. திருத்துறைப்பூண்டி (தனி) - சி. செல்லத்துரை
தஞ்சை மாவட்டம் :
42. பாபநாசம் - ராம்குமார்
43. பட்டுக்கோட்டை - என்.ஆர். ரங்கராஜன்
44. பேராவூரணி - கே. மகேந்திரன்
புதுக்கோட்டை மாவட்டம் :
45. திருமயம் - ராமசுப்புராவ்
46. அறந்தாங்கி - எஸ். திருநாவுக்கரசர்
சிவகங்கை மாவட்டம் :
47. காரைக்குடி - கே.ஆர். ராமசாமி
48. சிவகங்கை - வி.ராஜசேகரன்
மதுரை மாவட்டம் :
49. மதுரை வடக்கு - ராஜேந்திரன்
50. மதுரை தெற்கு - எஸ்.பி.வரதராஜன்
51. திருப்பரங்குன்றம் - சி.ஆர்.சுந்தர ராஜன்
விருதுநகர் மாவட்டம் :
52. விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ராங்
ராமநாதபுரம் மாவட்டம் :
53. பரமக்குடி (தனி) - ரா.பிரபு
54. ராமநாதபுரம் –
தூத்துக்குடி மாவட்டம் :
55. விளாத்திகுளம் - பெருமாள்சாமி
56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி
நெல்லை மாவட்டம் :
57. வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.கணேசன்
58. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
59. நாங்குனேரி - வசந்தகுமார்
60. ராதாபுரம் - வேல்துரை
கன்னியாகுமரி மாவட்டம் :
61. குளச்சல் - ராபர்ட் புரூஸ்
62. விளவங்கோடு - விஜய தரணி
63. கிள்ளிïர் - ஜான் சேக்கப்
Saturday, March 19, 2011
இயக்குனர் பாலுமகேந்திராவுடன் - கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்
எங்களது அலுவலகத்தில் மொட்டை மாடி கூட்டம் எப்பொழுதும் நடைபெறுவது உண்டு. அந்த மொட்டை மாடிக்கூட்டத்தின் நோக்கமே பயனுள்ள அரட்டை என்றும் சொல்லலாம். அதில் ஏதாவது ஒரு தலைப்பு அரசியலைப் பற்றியோ, புத்தகம் எழுதுவதைப் பற்றியோ, சினிமாவை பற்றியோ அல்லது பொருளாதாரத்தைப் பற்றியோ என்று ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அந்த துறையின் வல்லுனர்களை அழைத்து அதைப் பற்றி பேசி விவாதம் நடப்பதுண்டு.
இந்த கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில சமயங்களில் கூட்டம் நிறைய வரும் பல ச்மயங்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.
சுதந்திரமாக எல்லாரும் கலந்து பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். சில சமயங்களில் காரசாரமான விவாதம் நடைபெறும்.
அப்படி நேற்றைய கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ” எழுத்தில் இருந்து திரைக்கு " என்கிற தலைப்பில் பேசினார்.
மிகவும் அழகாக, தெளிவாக ஒரு படைப்பை எப்படி எடுக்கவேண்டும் என்று உரையாற்றினார்.
ஒரு சிறுகதையில் இருந்து எப்படி படத்தை எடுக்கலாம். அந்த கதை அப்படியே எடுக்கவேண்டுமா அல்லது அந்த கதையின் கருவை மையமாக வைத்து மட்டுமே எப்படியெல்லாம் படமெடுக்கலாம் என்கிற விஷயத்தை மிகவும் எதார்த்தமாக சொன்னார். நேற்று கலந்து கொண்டு இளம் வளரும் இயக்குனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஒரு சிலர் குற்றம் கண்டு பிடித்து கூட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் விதமாக அதிமேதாவி தனமாக பேசுபவர் எப்பொழுதுமே வருவதுண்டு.
ஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பு அந்த துறையைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் தெரிந்தாலாவது விமர்சனம் செய்யலாம், இல்லையென்றால் சந்தேகத்தை மட்டும் கேட்டுவிட்டு சென்றால் நன்றாக இருக்கும்.
அது போல ஒரு சிறுகதை எழுத்தாளார் பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நேற்றையக்கூட்டம். இது போல கிழக்கு மொட்டை மாடி கூட்டத்திற்கு முடிந்தவரையில் எல்லாரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Labels:
பொது
Subscribe to:
Posts (Atom)