எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, November 28, 2008

காங்கிரஸின் கையாலாகதத்தனம்

மும்பையில் தீவிரவாதிகளின் கண் மூடித்தனமான தாக்குதல்.

காங்கிரஸ் இனிமேலும் விழிக்குமா செயலிழந்த உள்த்துறை மற்றும் உளவுத்துறை செயல்படுமா !

உள்த்துறை அமைச்சர் சிராஜ் பாட்டேல் கடந்த முறை நடந்த தீவிரவாத தாக்குதலின் போது
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட உரையாடலின் போது மூன்று வெவ்வேறு நிறுவன்ங்களுக்கு தான் உடனுக்குடன் உடையை மாற்றி ஒய்யாரமாக பட்டும் படாமலும் பதில் சொல்கிறார்.

அதுபோன்று மூன்று வெவ்வேரான கோணங்களில் உள்த்துறையை சீரமைக்க அல்லது கட்டமைக்க முயற்ச்சி செய்திருக்கலாம்.

இவருக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை அவருக்கு தன்னுடைய ஆடை அலங்காரத்திலும் சிகை அலங்காரத்திலும் கவனம் செலுத்துவதற்க்கே நேரம் சரியாக இருக்கிற போது அவருக்கெங்க நேரம் உள்த்துறையையும், உளவுத்துறையையும் கவனிக்க.

(எனக்கு சரியாக தெரியவில்லை உளவுத்துறையும் இவருடைய துறையின் கீழ்தான் வருதா என்று, இருந்தாலும் அவர்மீதுள்ள கோபத்தினால் எழுதுகிறேன்)

இவரை ஏன் இன்னும் அமைச்சராக வைத்துள்ளார்கள் என்றால் அவர் நேரு குடும்பத்தாருக்கு நெருக்கமான நட்பு வட்டாரம் அவ்வளவே அவருடைய தகுதி.

காங்கிரஸில் களை எடுக்கு நேரம் வந்தாச்சி என்றுதான் நான் நினைக்கிறேன்.

மற்ற எல்லா துறைகளும் நன்றாக இயங்கி கொண்டிருக்கும் போது இவருடைய துறை மட்டும் ஏன் இப்படி தூங்கிக் (இயங்கி) கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

இந்தியா அடுத்த 20-30 ஆண்டுகளில் தன்நிறைவை அடைந்த்துவிடும் வல்லரசாக மாறும் என்று கருதும் போது.பலவீனமான பாதுகாப்பு வளையங்கள் இருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

உடனடியாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நல்லதொரு உளவு அமைப்பு. புதிதாக கட்டமைக்கப்படவேண்டும்,அவர்களுக்கு எல்லாவிதமான அதிகாரங்களையும் கொடுத்து திறம்பட செயல்பட வைக்கவேண்டும்.அவ்வாரு செய்தால் தான் சாதரண மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

அதைவிட்டு விட்டு வேரு எதை செய்தாலும் அது கங்கிரஸுக்கு பாதகமாக தேர்தலில் எதிரொலிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

Thursday, November 27, 2008

இந்தியாவுக்கு பிரபாகரன் வேண்டுகோள்





எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள்.

தமிழீழ தாய் நாட்டின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயம் எல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள்.

என்றும் இல்லாதவாறு ஒரு பெரும்போரை தமிழீழ தேசம் இன்று எதிர்கொண்டு நிற்கிறது. சிங்கள இனவாத அரசு ஏவி விட்டுள்ள தமிழ் இன அழிப்பு போருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் முண்டு கொடுத்து நிற்க, எமது மக்களின் தார்மீக பலத்துடன் நாம் தனித்து நின்று போராடி வருகிறோம்.

இந்த மண் எமக்கு சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நிலைபெற்ற மண். வரலாற்று காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராஜ்ஜியங்களை அமைத்து அரசாண்டார்கள்.

எங்கள் மண்ணில் ஆங்கிலேயே காலனியாதிக்கம் அகன்று சிங்கள ஆதிக்கம் கவிந்த நாள் முதல் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பி தேர்வு செய்யவில்லை.

திம்புவில் தொடங்கி ஜெனீவா வரை பல்வேறு வரலாற்று சூழல்களில் பேச்சுகளில் பங்குபெற்று வந்திருக்கிறோம். சிங்கள அரசுகளின் கடும்போக்கும் நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளுமே பேச்சு தோல்விகளுக்கு காரணம்.

புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தி தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிங்கள அரசு இந்த பேச்சு வார்த்தைகளை பயன்படுத்தியது. அனைத்து உலகத்தின் அனுசரணையோடு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு கிழித்து எறிந்து விட்டு தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது.

அப்போது, சமாதானம் பேசிய உலக நாடுகள் எதுவும் ஒப்புக்காக கூட கண்டிக்கவில்லை. மாறாக, சிங்கள தேசத்துக்கு அழிவு ஆயுதங்களை சில நாடுகள் அள்ளிக் கொடுத்தன. ராணுவ பயிற்சிகளையும், ராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் தமிழருக்கு எதிரான இன அழிப்பு போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவு இரக்கமின்றியும் சிங்கள அரசு தொடர்ந்து வருகிறது.

எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆகாயத்தில் இருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. உலகத் தமிழினத்தின் ஒட்டு மொத்தப் பேராதரவோடு இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எமது போராட்டம், எந்தவொரு நாட்டின் தேசிய நலனுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை வளர்த்துச் செயல்படவே விரும்புகிறோம். எமது மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு எம் மீதான தடையை நீக்கி எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எம்மை தடை செய்துள்ள நாடுகளை அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

இந்திய தேசத்தில் இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவு குரல்கள் இன்று மீண்டும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்த கால மாற்றத்துக்கு ஏற்ப, இந்திய பேரரசுடன் அறுந்துபோன எமது உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மை பிரித்து நிற்கின்றபோதும் எமது மக்களின் இதயத்துடிப்பை அறிந்து தமிழகம் இந்த வேளையில் எமக்காக எழுச்சி கொண்டு நிற்பது தமிழீழ மக்களுக்கும் எமது விடுதலை இயக்கத்துக்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி அன்புக் கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழக தலைவர்களுக்கும் இந்திய தலைவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரம் இந்தியாவுக்கும் எமது இயக்கத்துக்கும் இடையிலான நல்லுறவிற்கு பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில், அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடைïறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை நாம் தொடர்ந்து போராடுவாம்.

Saturday, November 15, 2008

கங்கிரஸ் தலைமையில் புதியகூட்டணி : பாராளுமன்றத் தேரதலில்







தமிழ் நாட்டைப் பொருத்தவரை மும்முனை போட்டியாகவும்
தேசிய அளவில் இருமுனை போட்டியாகவும் அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.

1.காங்கிரஸ்,பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள்.

2.தி.மு.க மற்றும் பா.ஜ.க.

3.அ.தி.மு.க,சுப்ரமணியசாமி மற்றும் இதர கட்சிகள் .

தற்போது கிடைத்த தகவலின் படி தி.மு.க வின் மீது மக்கள் அவநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்களுடன் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டால் தோல்வி தான் கிடைக்குமென்று தமிழக காங்கிரஸார் அகில இந்திய காங்கிரஸ்க்கு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சோனியா காந்தி அவர்கள் இதுவரை அதைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளாதவர் நெருக்கமான வட்டாரங்களில் தமிழ்நாட்டில் சட்ட ஒழூங்கு மற்றும்
தி.மு.க வின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அவ்வப்பொழுது கேட்டறிந்து வருகிறார், மற்றும் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்றும் கேட்டுள்ளார்.
ஆகவே ராமதாஸ் ஏற்க்கனவே இதுப்பற்றி பலமுறை காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி இப்பொழுது அகில இந்திய தலைமைக்கும் கேட்கும் படியாக காய்களை நகர்த்துவதாக தெறிகிறது.

அதனால் தான் இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸார் அவ்வளவாக பிடிகொடுத்து பேசாத நிலையிலும், தற்போதைய தி.மு.க அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள
வெறுப்பின் காரணமாகவும் சற்று ஒதுங்கி இருந்து மவுனம் காத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி MLA க்களின் கூட்டத்தில் கூட்டணியைப் பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் அரசிற்க்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அறிக்கைவிட்டார்.

தி.மு.க வின் சரிவு :

பல விதமான பிரச்சனைகளால் தி.மு.க அரசிற்கு நெருக்கடிகள் தோன்றிகொண்டிருக்கிறது.

1.முதலில் தயாநிதி மாறனுடைய தினகரன் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள்,
2.மதுரை தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்ட விவகாரம்.
3. தயாநிதி மாறனை அமைச்சர் பதவியிலிருந்தது நீக்கியது.
4.அமைச்சர் பூங்கோதை கிரிமினலுக்கு ஆதரவாக பேசி பதவியிலிருந்து நீக்கியது.
5.அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம்.
6.மணல் திருட்டு.
7.அரிசி கடத்தல்.
8.அமைச்சர் மைதின்கான் ஒரு விழாவில் ஏடாகூடமாக (அரிகடத்தலைப் பற்றி) பேசியது.
9.அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா வின் ஆள்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டு பதவியை இழந்தது.
10.பா.ம.க குருவை கைது செய்தது.
11.வைகோ வை கைது செய்தது.
12. முக்கியமாக மின்வெட்டுப் பிரச்சனை.
13.தற்போது இலங்கைப் பிரச்சனையை கையாளும் விதம்.
14.டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி பிரச்சனை.
15.அத்தியாவசய பொருட்களின் விண்ணை தொடும் விலைவாசி உயர்வு.
16.முக்கியமாக சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளில் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் தி.மு.க விற்க்கு குறைந்து கொண்டே வ்ரும் நிலையில்,விஜயகாந்தின் மீது மக்களின் கவனம் மாறி கனிசமாக செல்வாக்கு வளர்ந்து கொண்டு வரும் நிலையில் பா.ம.க வின் பச்சைக்கொடி காட்டபட்டதாலும் (கூட்டணிக்குள் தேமுதிக வருவதற்க்கு), ஏறக்குறைய இரண்டாம் கட்டத்தலைவர்கள் கூட்டணியைப் பற்றி திரைக்குப் பின்னால் தேமுதிகவுடன் பேசிவருவதாலும், இந்தக் கூட்டணி ஏறக்குறைய அமைய வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

அதனால் தான் T. R. பாலு அவர்களின் மூலமாக தூது அனுப்பி பா.ம.க வை மீண்டும் இணைத்துக் கொள்ள கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது.

ஆகவே வெகு சீக்கிரத்தில் காங்கிரஸ் தலைமையில் நாடளுமன்ற கூட்டணி அமையும் என்றே தெரிகிறது.

அப்படி நடந்தால் கலைஞரின் ஆட்சி கவிழ்ந்து மேற்சொன்ன கூட்டணியே சட்டமன்றத்தேர்தலிலும் எதிரொலிக்கும்.

காங்கிரஸின் கனவு நனவாகி, காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய எனது வாழ்த்துக்களை இப்பொழுதே தெறிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, November 12, 2008

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டம் ! சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்களின் அராஜகங்கள் அட்டூழியங்கள் !







ஒருவரையொருவர் தாக்கி கொள்கிறார்கள் நான்கு சுவற்றுக்குள் அல்ல ஆயிரக்கனக்கான மக்கள் நடமாடும் அதுவும் உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தின் பக்கத்தில் உள்ள கல்லுரி வாயிலில் ஒரு மாணவன் சகமாணவர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு அந்த மாணவன் மயங்கி விழுந்த பின்பும் கூட சக மாணவர்கள் அவனை சூழ்ந்து கொண்டு அடிக்கிறார்கள், அருகில் காவல் துறையினர் இருக்கிறார்கள், பத்திரிக்கைத் துறை நிருபர்கள் இருக்கிறார்கள் மக்கள் எல்லாம் கதறி காப்பாற்றுங்கள் என்று கூறிய பின்பும் கூட அதை தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பர்த்துகொண்டிருந்தது ஏன்?

சட்டம் ஒழுங்கை காப்பாற்றபடும் காவல் துறையினறாலே கூட அதை தடுக்க முடியாமல் நிற்க்கிறார்கள் என்றால், ஏன் அவர்களுக்கு,

வேறு வேளை இருந்த காரணத்தால் அதை அவர்கள் தடுக்க வில்லையா?

இல்லை அவர்களுக்கு யாரவது லஞ்சம் கொடுத்தனால் கண்டுகொள்ளவில்லையா?

இல்லை அதை தடுக்கப் போனால் நாமும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் வேடிக்கைப் பார்த்தார்களா?

ஏன் அவர்களுக்கு சிறிதளவு கூட மனிதாபிமானம் இல்லையா?

சட்டக்கல்லுரி மாணவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டால் சட்டம் காவல்துறையினர் மீதே பாயும், ஏனென்றால் அவர்களெல்லாம் சட்டக்கல்லுரி மாணவர்கள், சட்டம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள்.

சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு மட்டும் என்ன தலையில் கொம்பா முளைத்திருக்கிறது, சட்டம் பயின்றால் அவர்கள் இஷ்டத்திற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா!

ஆம் நீங்கள் செய்யலாம்! உங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று அக்கல்லூரிகளி படித்த முன்னால் மாணவர்களும் இன்னால் வக்கீல்களும், சாதி சங்கத் தலைவர்களும் வரிஞ்சிக் கட்டிக்கொண்டு நிற்க்கிறார்கள்.

அம்பேத்க்கார் கல்லுரியில் தான் எல்லாம் தலைவிரித்து தாண்டவம் ஆடுகிறது. சட்டத்தைக் காப்பாற்ற அணி நிற்ப்பார்கள் என்றால்,இவர்களெல்லாம் புரட்சி செய்கிறோம் மேல் ஜாதியினருக்கு எதிராக கலகம் செய்கிறோம், மேல் ஜாதிகாரர்களின் ஆத்திக்கத்தை ஒழிக்கப் போராடுகிறோம்,என்கிற போர்வையில் வன்முறையை தூண்டி, ஜாதி கலவரத்தை தூண்ட நினைக்கிறார்க்ள். நான் தான் சட்டக் கல்லுரியில் கலகம் செய்தேன், நான் தான் அந்தப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினேன்,என்று கூறி தாழ்த்தப் பட்டவர்களின் தலைவன் என்று ஏதாவது கட்சியில் பதவியை வங்கிக்கொண்டும் இல்லை ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொண்டும் அரசியல் தலைவர்கள் ஆகிவிடலாம் என்று நினைத்து அவர்கள் அவ்வாரு நடந்து கொள்கிறார்கள்.

நான் சொல்கிறேன் நீங்கள் கலகம் செய்யுங்கள் தாழ்த்ப்பட்டவர்களெல்ல்லாம் நன்றாக படியுங்கள் படித்தால் தான் எதிர்காலம் நமது கைகளில் வருமென்று !

போராடுங்கள் கல்விக்கு ஆகும் செலவை மானியமாகத், நல்ல தரமான மற்றும் சர்வதேச தரத்திற்க்கு கல்வியை தாருங்களென்று !

தலைமைத்தாங்குங்கள் எங்கெல்லாம் சமத்துவத்திறக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் அறப்போராட்டித்திற்க்கு !

அப்படி வந்தவர்தான் டாக்டர் அம்பேத்க்கார் அவர்கள். அவருடைய பெயரை வைத்துள்ள கல்லுரியில் படித்துக் கொண்டு காட்டுமிராண்டிதனமாக,ரௌவுடித்தனமாக, அராஜகத்தில் ஈடுபடுவது மாபெரும் கண்டனத்திற்க்குரிய ம்ன்னிக்க முடியாத குற்றமாகும்.

சட்டத்தை மதிக்கப்படுபவர்களே அதை மிதிக்கும் போது, சட்டக் கல்லூரி மாணவர்களை அடக்கும் விதமாக, ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக, மற்றக் கல்லூரி மாணவர்களை போல் நடக்கும் விதமாகசில சட்டத் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் BAR Council .

கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் எந்த ஒரு ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளில் ஈடு பட்டாலோ அல்லது கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசினாலோ அல்லது
ரௌடித்தனமாக நடந்தாலோ அல்லது எந்த ஒரு கட்சியுடன் தொடர்பிருந்தாலோ அல்லது எந்த போலிஸ் ஸ்டேசனில் அவர்களுக்கெதிராக கேஸ் இருந்தாலோ அல்லது
பதிவாகி இருந்தாலோ கூட BAR Council லில் உருப்பினராக முடியாது என்ற ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய சட்டக்கல்லூரி மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.