எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, April 26, 2009

கலைஞரின் கடைசி நாடகம் கரை சேர்க்குமா இந்த தேர்தலில்

கலைஞர் அவர்கள் அண்ணா நினைவிடத்தில் இன்று காலை 5 மணி முதல் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்திருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்கிற அரசில் நாடகத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார் கலைஞர்.

இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இன்று ஏன் தோன்றியது?

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் தோன்றியதைப் போல் இவருக்கும் தோன்றிவிட்டதா இல்லை இது வெறும் தேர்தலில் தோற்று விடுவோமோ என்கிற பயம் கடைசியாக உள்ள அஸ்திரத்தை பயன்படுத்தி மக்களை மாற்றலாம் என்று கனவு காண்கிறார்.

இதை அவர் ஆறு மாதத்திற்கு முன்பு செய்திருந்தால் நாம் சொல்லலாம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார் இவரல்லவா தமிழினத்தலைவர் என்று.

இப்பொழுது எல்லோருக்கும் தெரியும் இது வெரும் அரசியல் நாடகம் என்று.

பார்ப்போம் கலைஞரின் இந்த கடைசி நாடகம் அவரை இந்த தேர்தலில் கரை சேர்க்குமா என்று.

கண்டிப்பாக இல்லை சேர்க்காது.

Thursday, April 23, 2009

பராசக்தி சினிமா வசன பாணியில் இலங்கை பிரச்னை

லோக்சபா தேர்தலில் காங்., கூட்டணியை தோற்கடிப்பதற்காக, தமிழ் அமைப்புகள் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்., மற்றும் தி.மு.க., கட்சிகள் செய்த துரோகத்தை பராசக்தி பட கோர்ட் காட்சியை போல் சித்தரித்து, 'CD' தயாரித்து பொதுமக்களிடையே வழங்கி வருகிறது.

'CD'யில் உள்ள மாற்றப்பட்ட வசனம்: "இந்த நீதிமன்றம் விசித்திரமிக்க பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. வித்தியாசமான மனிதர்களையும் கண்டிருக்கிறது. ஆனால், உங்கள் முன் வாதாடும் இந்தத் தமிழன் வித்தியாசமான மனிதனும் அல்ல, வாதாடும் இந்த வழக்கும் விசித்திரமான வழக்கு அல்ல. வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய மனிதர்களில் நானும் ஒருவன்.மக்களுக்குள் கலகத்தை விளைவித்தேன்... அரசாங்கத்தை அதிரடியாக தாக்கினேன்... இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான்.நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை... நிச்சயமாக இல்லை.


மக்களுக்குள் கலகத்தை விளைவித்தேன். மக்களை கொடியவர்களாக ஆக்குவதற்காக அல்ல... மண்டிப்போன மந்தைக் கூட்டங்களாக மக்கள் ஆகிவிடக்கூடாதே என்பதற்காக. அரசாங்கத்தை தாக்கினேன். நான் அரசாள்வதற்காக அல்ல... அரசின் பகல் வேஷத்தை அம்பலப்படுத்துவதற்காக! (கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி)உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்... என் இனம்தான் பாதிக்கப்பட்டது... நேரடியாக பாதிக்கப்பட்டது. என்னை குற்றவாளி என்கிறீர்களே? இந்த குற்றவாளியின் இன வரலாற்றை கொஞ்ச தூரம் பின்னோக்கிப் பார்த்தால்... என் இனம் கடந்து வந்துள்ள சிறப்புகள் எத்தனை என்பதைப் பார்க்க முடியும்.கேளுங்கள் தமிழனின் கதையை; தீர்ப்பு எழுதுவதற்கு முன் கேளுங்கள் தமிழனின் கதையை...!


லெமூரியா கண்டத்திலே பரந்து விரிந்து எல்லைகளற்று வாழ்ந்தவன் தமிழன். எதையும், எவரிடத்திலும் கற்றவர்கள் அல்ல நாம். அனைவருக்கும் கற்றுக் கொடுத்த இனம். பண்பாட்டைப் பழகியவர்கள் இல்லை நாம். பண்பாட்டைப் படைத்தவர்கள்.கடலுக்கு அப்புறத்தில் தென்னாடு; இப்புறத்தில் தமிழ்நாடு. கடல் கோடின் சீற்றத்திற்கு நாம் மட்டும் விதிவிலக்கா... சொந்த நாட்டிலே வாழும் என் சகோதிரிகளின் நிலையைக் கண்டேன்... (கற்பழிப்பு, கொலை சம்பவ வீடியோ காட்சிகள்) காணக்கூடாத அவலங்களை எல்லாம் கண்டேன்."வந்தாரை வாழவைக்கும் தமிழினம்' மங்களகரமான பெயர்.


ஆனால், மூச்சிலும் சுதந்திரமில்லை. வந்தேறிய சிங்கள குடியினரின் இனவெறிக்கு ஆளாகி, வாழ வழியின்றி தவித்தது என் தமிழ் இனம். செழித்து வாழ்ந்த இனம் இன்று சீரழிந்துவிட்டது.தமிழினம் துடித்தது; தமிழினத்திற்காக நான் துடித்தேன். அதற்கு கைமாறாக தமிழினத்திற்கு கருணை காட்டினர் சிலர் (ராஜிவ் படம்). அமைதிப்படை என்ற பெயரால் அக்கிரமத்தின் ஆணி வேர் பதிந்தது எமது ஈழமண்ணில். அதை அன்றே பிடுங்கி எரிந்திருக்காவிட்டால் (இலங்கை சென்ற அன்றை இந்திய பிரதமர் ராஜிவை சிங்கள போலீஸ்காரர் தாக்கும் காட்சி) என் இனம் வாழ்ந்ததற்கே அடையாளம் தெரியாமல் போயிருக்கும்.சொந்த நாட்டில் வாழ தமிழனுக்கு வழியில்லை.


சொந்த நாட்டை மீட்கும் முயற்சிக்கு ஆதரவு தர நாதியில்லை. என் தலைவன் மட்டும்(பிரபாகரன் ) கொஞ்சம் தலை அசைத்திருந்தால், எதிரிகள் (ராஜபக்ஷே) மட்டுமல்ல... அந்த இனத்தின் சுவடுகள் கூட இல்லாமல் போயிருக்கும் ஓர் நொடியில். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது. என் தமிழ் இனத்தை விரட்டியவனின் விலா எலும்பு தெரித்திட நினைத்ததில் என்ன தவறு... ஆயுதம் எடுத்தது குற்றமா... அதர்மத்தை அழித்தது குற்றமா... அடிமைகளை விடுவித்தது குற்றமா...


தமிழனை நாதியின்றி அலைய வைத்தது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது வந்தேரிய சதிகார இனவெறி ஏகாதிபத்திய ஏகலைகளின் குற்றமா?இனி எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் (விடுதலைப் புலி கொடி) காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். இவ்வாறு அந்த 'CD'யில் உள்ளது.

Friday, April 17, 2009

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு - 100% நல்ல வேட்பாளர்

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு நன்கு படித்த இளைஞர், முற்போக்கான சிந்தனைவாதி இவரைப் போன்ற ஒரு வேட்பாளரை நாம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது நமது கடமை.

மறக்காமல் வெந்த சோத்தையே வேகவைக்காமல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இது போன்ற இளைஞருக்கு வாப்பளிக்க வேண்டும்.

அவர் என்ன செய்தார் என்ன செய்யவில்லை என்று பிறகு நாம் கேள்விகளைக் கேட்கலாம்.

அவர் செய்வார் என்று நம்புவோமாக.

இவரை மற்ற அரசியல்வாதிகளைப் போல் இருப்பார் என்று நினைக்க வேண்டாம். இவரிடம் ஒரு வித்தியாசத்தை பார்க்க முடியும்.

நான் தென்சென்னை வாக்காளனாக இருந்தால் என்னுடைய வாக்கு அவருக்குத்தான்.

தேர்தலில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

Sunday, April 12, 2009

நடிகர் ரித்தீஷ் - நல்ல வேட்பாளர் 100% ஓட்டளிக்கவும்நடிகர் ரித்தீஷ் மாதிரி வேட்பாளரை தேர்வு செய்து ஓட்டளிக்கவும் நான் சொல்வது சிரிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக.

இவர் என்னுடைய பார்வையில் நல்ல வேட்பாளர் தான். இவரால் தொகுதிக்கு பல நல்ல திட்டங்கள் வரும்.

இவர் சாதாரண நடிகராக இருக்கும் போதே நிறைய காரியங்களை மக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து செய்துள்ளார்.

நீங்க கேட்கலாம் இதெல்லாம் அவருடைய சுய நலத்திற்காக என்று ஒரு சுய விளம்பரத்திற்காக என்று?

இருக்கட்டுமே அப்படியே இருக்கட்டுமே ஏன் விளம்பரம் தேடக்கூடாதா, மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று துடிப்போடு இருக்கிற இளைஞர் அவர், ஒரு வேகத்தில் தன்னுடைய பேர் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்கிற நோக்கம் தான்.

தன்னைப் போல் எல்லா இளைஞருக்கும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும் என்று இருக்கலாமே.

இவரை போன்ற நல்ல துடிப்பான இளைஞருக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் பல உருப்புடியான நல்ல விஷயங்கள் நடக்கும்.

நான் ராமநாதபுரத்தில் இருந்தால் நடிகர் ரித்தீஷ்க்குத் தான் என்னுடைய வாக்கு.

நடிகர் ரித்தீஷ் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை கூறுகிறேன்.

Friday, April 10, 2009

கலைஞர் ஈழத்தமிழர்களின் எட்டப்பன்

இன படுகொலையே உயிர் மூச்சாக கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேவை நீ மாவீரன் அலெக்சாண்டருடன் ஒப்பிட்டு ஓலமிடுகிற ஓநாயே.

ஹிட்லரின் நாஜிப் படைகள் 6 மில்லியன் யூதர்களை கொன்று குவித்தது. அதே போல் ராஜபக்‌ஷேவின் இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கிறது.

அப்பாவி மக்கள் மீது விஷ குண்டுகளை வீசி அழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய அரசாங்கம் கூட்டிக் கொடுத்து விளக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது.

வெட்க கேடு வேதனையான ஒரு விஷயம். இங்கிலாந்திலே தமிழர்கள் எல்லோரும் நாடாளுமன்றத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துகிறார்கள்.

ஆனால் நாமோ நம் கண்முன்னால் நடக்கும் இனப் படுகொலையை பார்த்து முடம் போல் இருக்கிறோம்.

இவர்கள் அரசியல் நாடகத்தை நாமும் பார்த்து கைக்கட்டி வாய்ப்பொத்தி பார்க்கிறோம்.

ஏன் விஷ குண்டுகளை இந்திய அரசாங்கமே கூட கொடுத்திருக்கலாம்? யார் கண்டது.

உதட்டளவில் பேசுபவர் தான் கலைஞர் கருணாநிதி.

நயவஞ்சக கருணாநிதியே போதும் உன்னுடைய நாடகத்தை நிறுத்து.

உன்னை தமிழினத் தலைவர் என்றா சொல்வது.

தமிழர்களின் தீரா தலைவலி நீ.

ஓநாய்களின் ஒட்டு மொத்த கூடாராம் நீ.

ஓநாய்களுக்கு பாடம் நடத்தும் பேராசிரியர் நீ.

ஈழத்தமிழர்களின் ரத்தத்தை உறுஞ்சும் ரத்தக் காட்டேரி நீ.

கலைஞர் ஒழிந்தால் ஒழிய மக்கள் வாழ வழியில்லை.

அன்றோ கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், இன்றோ ஈழத்தமிழர்களுக்கு கலைஞர்.

சிந்திப்பீர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை

இங்கிலாந்து வெள்ளைக்கார அப்பா தன் குழந்தைக்கிட்ட நிறைய சாகச கதைகள் சொல்லுவார். அந்த குழந்தையும் சலிக்காம கேட்கும், அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கும் போது உலகம் என்றால் என்ன அப்பா? என்று கேட்டாள். அந்த அப்பாவோ உலகம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொன்னார். அது அந்தக் குழந்தைக்கு புரியவில்லை.

இந்தியா என்கிற நாடு ஒன்று இருக்கிறது. அங்க இருக்கிற மக்கள் எல்லோரும் எல்லா வசதி வாய்ப்புகளோடும் இருக்காங்க என்று சொன்னார்.

வசதிவாய்ப்புகள் இன்னா என்னப்பா?

வசதிவாய்ப்புகள் என்றால் பஞ்சு மெத்தையும், பாலும் தேனும் கலந்த சோறும்,பட்டுத் துணிகளும், தங்கம், வைரம், வைடூரியமும், மாணிக்கமும், ரத்தனமும் மற்றும் முத்துக்கள், எல்லாம் அங்கே சாதாரணமாம்.

அப்படியா அப்பா!

அந்த இந்தியா எங்க இருக்குப்பா?

அதுவா அது கடல் தாண்டி எங்கோ இருக்கிறது. அதை யாரும் பார்த்து கிடையாது கேள்விப்பட்டதோடு சரி.

இவர் போல் தான் எல்லாத் தந்தைகளும் தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி கேள்விக் கேட்டக் குழந்தை கொலம்பஸ் பிறகு இந்தியாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பி போகும் போது புயல் வீசியதில் கப்பல் ஒரு கரையை ஒதுங்கியது. அவர் கேள்வி
பட்டதை போல் அங்கே இருந்த நிலபரப்புகள் அமைப்புகள் மிகவும் அழகாகவும் மிகவும் செழுமையாகவும் இருந்தன.

அவரோ மிக்க மகிழ்ச்சியில் திளைத்து ஆகா நான் இந்தியாவை கண்டு பிடித்துவிட்டேன் என்று ஆனந்த களியாட்டம் போட்டார். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சிவப்பு நிறமாக இருந்ததனால் அவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்தார்.

பின்னாளிலே தெரிய வந்தது அவர் கண்டுபிடித்து இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்று.இப்படியே பிரெஞ்சுக் காரரும் அமெரிக்காவை கண்டுபிடித்திருந்தனர் அதனால் பிரெஞ்சுக்காரர்களும் தனக்கு அமெரிக்காவை சொந்தங்கொண்டாடினர்.
போர்ச்சுகீசியர்களும் அமெரிக்காவை சொந்தங்கொண்டாடினார்கள்.

அமெரிக்காவின் பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்கள் அவர்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தனர்.

இங்கிலாந்தும், பிரெஞ்சுகாரர்களும் மற்றும் போர்ச்சுகீசியர்களும் தங்களது நாட்டில் இருந்து வந்து குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்.

இதிலிருந்து தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் அமெரிக்காவை பங்குபோட நினைத்து போராட்டத்தை ஆரம்பித்தார்கள் அல்லது மற்ற நாட்டவர்களைத் தாக்க முற்பட்டார்கள்.

இங்கிலாந்தியர்களின் குடியேற்ற நிலபரப்பை ஆக்கிரமித்து கொண்டே சென்றனர் பிரெஞ்சுக்காரர்களும், போர்சுகீசியர்களும். இவர்களுக்கிடையில் சண்டை
முற்றிக்கொண்டே சென்றது.

அதனால் அதை தடுத்து நிருத்த ஆங்காங்கே பல ராணுவதுருப்புகளை ஏவிட்டது இங்கிலாந்து அரசு.

அதில் குறிப்பிடத்த படையை ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.

நிறைய தோல்விகளும் ஒரு சில வெற்றிகளும் அவருக்கு கிடைத்தது.

இப்படி இங்கிலாந்தில் இருந்து ஆணை வரும் அதை அமெரிக்காவில் குடிபெயர்ந்த இங்கிலாந்தியர்கள் செய்ய வேண்டும். குடியேற்றம் பெற்ற இங்கிலாந்தியருக்கென்று தனி
சுதந்தரமும்,உரிமையும் கிடையாது. எது வேண்டுமானாலும் இங்கிலாந்து அரசிடம் தான் கேட்டுப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.இவர்களுக்கு வேண்டிய சீர்திருத்தங்களை பரிசீலித்து இங்கிலாந்திற்கு அனுப்பினாலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டே வந்தன.ஆனாலும் இங்கிலாந்து நாடாளுமன்றம் எந்த சட்ட திட்டத்தை இயற்றுதோ அந்த சட்டத்திட்டத்தை அவர்கள் ஏற்று மதித்து நடந்து வந்தார்கள். இருந்தாலும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உரிமைகளைக் கூட இங்கிலாந்து அரசாங்கம் மறுத்தும், நிராகரித்தும் வந்தது.

நாள்பட நாள்பட அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருந்தது. பதிமூன்று மாகாணங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கூடி ஒரு முக்கியமானத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இனிமேல் இங்கிலாந்து அரசாங்கம் இயற்றும் சட்டதிட்டத்தை மதிப்பதில்லை என்றும், தங்களுக்கென்று பலமான ராணுவத்தை அமைப்பதென்றும்.

தயாரானது அமெரிக்க ராணுவம் அதற்கு தலைமை ஏற்று நடத்த ஜார்ஜ் வாஷிங்டனை நியமித்தார்கள். இங்கிலாந்தில் இருந்து படைகள் வந்திறங்கின. சங்கொலி முழங்க போர் ஆரம்பம் ஆனது குடியேற்ற அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்துக்கும்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நடந்த அமெரிக்கப் போர், 1783-ம் ஆண்டு வெர்செயில்ஸ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அமெரிக்க சுதந்தரத்தை அங்கீகரித்தது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான எல்லை வரையறுக்கப்பட்டது.

அமெரிக்க சுதந்தரப் போர் முடிவுக்கு வந்ததும் வாஷிங்டன் மிகத்தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார். நமக்கு முன்னால் ஒரு பெரிய கடமை காத்திருக்கிறது. நமக்காக ஒரு நாடு கிடைத்துவிட்டது. போரில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஒற்றுமையாகப் பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கை எல்லா மக்களுக்கும் இருக்கிறது. அதே நம்பிக்கையை மக்களிடமிருந்தது பெறவேண்டும் என்றால் எல்லா மாகாணங்களும் ஒன்றுபட்டு ஒரே அரசாக, அதே சமயம் மக்கள் அரசாக மாறவேண்டும் என்றார்.

1789-ல் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டத்தின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அமைச்சர்களின் உதவியோடு ஜனாதிபதி ஆட்சி செய்வார்.

சட்டங்களை இரண்டு குழுக்கள் உருவாக்கும். ஒன்று குடியேற்ற நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு. இந்தக் குழுவைத் தான் “செனட்” என்று அழைப்பார்கள். இன்னொரு குழு, மக்களால் ஓட்டுப் போட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, நம்ம ஊர் சட்ட மன்றம் மாதிரி. செனட் சபையில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து செனட் சபைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த இரண்டு சபைகளுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரமும், நிதி நிலைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இருந்தன.

இப்படி அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். புதிய அரசியலமைப்புச் சட்டங்களைக் கொண்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.

“வாஷிங்டன் தான் ஜனாதிபதியாக வேண்டும்” என்று குரல் நாடு முழுக்க வலுத்துக்கொண்டே போனது. வாஷிங்டனுடன் போரில் பங்கெடுத்திருந்த கர்னல் லீ விரிவாக வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “எந்த காரணத்தைச் சொல்லியும் நீங்கள் ஜனாதிபதியாகிற வாயப்பை மறுத்துவிடாதீர்கள். குறிப்பாக, உங்களுடைய தனிப்பட்ட பண்ணை வாழ்க்கைக்காக, நாடு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

1789, ஏப்ரல் 14. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான ஆணையை அவருக்கு அனுப்பியது. அந்த அழைப்பை வாஷிங்டன் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அது அமெரிக்க காங்கிரஸின் அழைப்பல்ல, அமெரிக்க மக்களின் அழைப்பு.

1789 ஏப்ரல் 30-ம் தேதி வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

பலத்துறைகளில் தன்னுடைய முழுபலத்தையும் கொடுத்து அமெரிக்காவை கட்டமைத்தார்.

இப்படி பல விஷயங்களை கொடுத்து மிக அழகான நடையில் எழுதி இருக்கிறார் ஆசிரியர் பாலுசத்யா.புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Friday, April 3, 2009

நடிகர் S. S. சந்திரன் ஒரு மாமாவா, நடிகர் சந்திரசேகர் கம்யூனிஸவாதியா

கூட்டுப் புழுக்கள்:


இந்தப் படத்தை நான் சிறுவயதிருக்கும் போது கிட்டதட்ட 2 அல்லது 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டியிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் முதல் முறையாக பார்க்கும் போது. அப்பொழுதெல்லாம் படம் என்றால் என்ன என்று அந்த வயதில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் நானும் கதையோடு ஒன்றி கதாப் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் சிரித்தால் சிரிப்பதும், அவர்கள் அழுதால் நாமும் அழுவதும், அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நாம் கஷ்டப் படுவததை போல் உணர்வோம்.

அந்த உணர்வு நேற்று படம் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்டது ஏனென்றால் நான் படத்தில் முழுவதுமாக லயித்துவிட்டேன் என்று சொல்வதை விட இயக்குனரின் கதை மற்றும் திரைக்கதை மிக அருமையாக இருந்தது.


நேற்று ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் கூட்டுப் புழுக்கள் என்ற படம் பார்த்தேன்.மிகவும் அருமையான படம் அது. ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் இயக்குனர் ஆர்.சி. சம்பத் செதுக்கி இருக்கிறார். அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் மிக அற்புதமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

முடிந்தால் எல்லோரும் பாருங்கள்.

முடிந்தவரை இயக்குனர் அவர்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.

குடும்பம், அரசியல், உறவுகள், பாசம், காதல், சோகம், சந்தோஷம், காதல் தோல்வி, கம்யூனிஸம்.


இங்கு ஒரு கதாப் பாத்திரத்தில் வரும் சம்பவத்தை சொல்ல ஆசைப் படுகிறேன்:


அந்தப் படத்தில் வரும் ஒரு குடும்பத்தில் அப்பா மாதம் ஒவ்வொரு முறையும் ஏதாவது வேசி கிட்ட போவார்.அதற்கு ஒரு இடைத்தரகர் ஒருவர் இருப்பார்.
(இதில் அப்பா கதாப்பாத்திரமாக S.S. சந்திரன் )

இந்த மாதம் அந்த இடைத்தரகர் வந்து நல்ல அழகான கல்லூரிப் பெண் இருக்கிறார்கள் வாங்க என்று கூப்பிடுவார் அவரும் வருவார் பார்த்தால் அவருடைய மகள்.

இங்கு இருவருக்குமிடையே ஏற்படும் குற்றவுணர்வுகளை மிக அழகாக நேர்த்தியாக காட்டியிருப்பார் இயக்குனர் அவர்கள்.

அடுத்த சீன்களில் அப்பாவுக்கும் மகளுக்கும் வசனமே இருக்காது இருவரும் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் ஆனாலும் சுகமான முடிவை தந்து இருப்பார்.

இதில் இடதுகை சந்திரசேகர் கம்யூனிஸவாதியாக நடித்திருப்பார்.

இப்படி ஐந்து குடும்பங்கள் வாழ்கின்றன, ஒரே காம்பவுண்டுக்குள்.

ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் இருக்கும் பிரச்சனைகளையும் மிகவும் அழகாக சொல்லியிருப்பார்.

அதில் குறிப்பாக யாரையும் நாயகன் நாயகி என்று சொல்ல முடியாது.நடித்த எல்லோரும் நாயகர்கள் எல்லோருமே நாயகிகள்.

முழுமைப் பெற்ற படம் அது.

அதில் நடித்த நடிகர்கள்

ரகுவரன்
அமலா
இடக்கை சந்திரசேகர்
S.S. சந்திரன்
C.I.D. சகுந்தலா
தீபா
சாருகாசன்
ஸ்ரீகாந்த்
ராதாரவி
சரிதா
கோபால கிருஷ்ணன்