ஜெயலலிதாவின் பழிவாங்கும்
நடவடிக்கையில் அவர் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதேயில்லை எதிர்கட்சி ஆனாலும் சரி உட்கட்சியில்
இருப்பவர்கள் ஆனாலும் சரி, தன் கூடவே இருப்பவர்கள் என்றாலும் மற்றும் சாமானிய மக்கள்
(கமல் உள்பட) ஆனாலும் சரி எல்லோரையும் சமமாக பாவிப்பவர் முசோலினி, ஹிட்லர் வரிசையில்
ஜெயலலிதா.
விஸ்வரூபம் திரைபடத்தின்
இசைவெளியீட்டு விழாவை ஜெயலலிதாவிற்கு சொந்தமான தொலைகாட்சி நிறுவனம் ஜெயா டி.வி ஏற்று
நடத்தியது மற்றும் தொலைகாட்சி ஒலிபரப்பு உரிமங்களை சில கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல்
இடமிருந்து பெற்றது, அதன் பிறகு அவர் படத்தை DTH மூலமாக நேரடியாக ஒலிபரப்ப முடிவெடுத்து
சில satellite தொலைகாட்சி வைத்திருக்கும் நிறுவனத்திடம் விற்றார் அதில் திமுக வைச்
சேர்ந்த சில நிறுவனத்திற்கும் விற்றார் அதனால் அவர்கள் அதாவது ஜெயா தரப்பு ஆட்சேபம்
தெரிவித்தது, இருந்தும் கமல் மசியவில்லை அதனால் அவர்களுக்கு கோபம் மற்றும் சில விலை
பிரச்னை தொடர்பாக ஜெயா டிவி நிறுவனத்துக்கும் கமலுக்கும் நடந்தது அதில் கமல் தான் வாங்கிய
முன் தொகையை ஜெயா டிவி நிறுவனத்துக்கு திரும்ப கொடுத்துவிட்டார், அதனால் ஆளும் கட்சிக்கு
சொந்தமான நிறுவனத்தை பகைத்துக் கொண்டு நீங்கள் தமிழகத்திலே படத்தை ஓட்ட முடியுமா என்றும்
கேள்வியும் எழுப்பி இருக்கிறார்கள்.
மற்றும் ஜெயலலிதாவின்
கோபத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது அதாவது கடந்த மாதம் நடைபெற்ற ப.சிதம்பரம்
ஒரு பார்வை என்கிற நூல்வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, கமல் மற்றும் திமுக தலைவர் உள்பட
எல்லோரையும் அழைத்து இருக்கிறார்க்ள். அதில் கமல் கேள்விப்பட்டதை அதாவது ப.சிதம்பரத்தைப்
பற்றி அவருடைய நூல் வெளியீட்டு விழாவில் பாராட்டும் விதமாக தாங்கள் அளவற்ற சாதனையை
புரிந்திருக்கிறீர்கள் அதனால் தங்களைத் தேடி பல பதவிகள் வந்து கொண்டு இருக்கிறது நீங்கள்
எடுத்த எந்த வேலையையும் சரியாகவும், திறமையாகவும் முடிக்ககூடிய திறமை பெற்றவர் நீங்கள்
அதனால் இந்தியாவில் தங்களுக்கு பிரதமர் நார்காலியும் தங்களைத் தேடிவரும் என்று பேசினார்
இதில் அரசியல் கலப்பு இல்லாமல் வெகுளியாக பேசியதை கலைஞர் அரசியலாக்கினார் எப்படி என்றால்
தம்பி கமலஹாசன்
சொன்னதைப் போல ஒரு வேட்டிக் கட்டிய தமிழர் தான் பிரதமராக வரவேண்டும் ஆனால் சேலைக்கட்டிய
பெண் வரகூடாது என்று இது தான் ஜெயலலிதாவின் கோபத்தை அதிகப்படுத்தி கமல்ஹாசனுக்கு இன்று
இந்த நிலைமை.
இதுவரையிலும் கமல்ஹாசனுக்கு
திமுக சார்பில் இஸ்லாமிய தலைவர்கள் சந்தித்தாக எந்த தகவலும் வரவில்லை, கலைஞரும் அவருக்காக
அறிக்கை விட்டாரே தவிற களத்தில் இறங்கவில்லை.
ஆனால் ஜனநாயகத்தை
காங்கிரஸால் மட்டுமே கட்டிக்காக்க முடியும் என்பதற்கு உதாரணமாக தமிழக அரசு படத்தை திரையிட
15 நாட்களுக்கு தடைவிதித்ததும் மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் மணீஷ் திவாரி கடும்
ஆட்சேபம் தெரிவித்தார். சென்சார் போர்டு ஒரு படத்திற்கு அனுமதியளித்துவிட்டால் அதனை
இந்தியாவில் எங்கும் திரையிடலாம், அதற்கு தடையளிக்க கூடாது என்று.
இதனிடையே நேற்றும்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் J.M. ஹாரூண் தலைமையில் இஸ்லாமிய
குழு ஒன்று சந்தித்து பிரச்னைக்கு தாங்கள் துணை நிற்பதாகவும் கூடிய விரைவில் தங்களுக்கு
தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்து சென்றார்கள், அதன் அடிப்படையில்
காங்கிர்ஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் உள்துறை அமைச்சருமான சுஷில் குமார்ஷிண்டே
கமல்ஹாசனுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும், எல்லோருக்கும் சம உரிமை என்ற
ஜனநாயகத்தை கட்டிகாப்போம் அதை யார் தடுத்தாலும்
சும்மா இருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார், மற்றும்
காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறிய கருத்தில் சினிமா தொடர்பான
சட்டங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு சிந்தித்து வருவதாகவும், ஒருமுறை சென்சார்
போர்டு அனுமதியளித்தால் அதனை யாரும் தடைவிதிக்க முடியாதபடி அந்த திருத்தம் இருக்கும்
என்றும், இல்லாவிட்டால் ஒவ்வொரு மாநிலமும் தனியாக சென்சார் போர்டு அமைக்கும் அதனால்
நாட்டின் ஒருமைபாட்டுக்கு குந்தகவிளையும் அதனை தடுக்க சட்ட திருத்தம் கொண்டுவர இதுதான்
சரியான நேரம் என்றும் தன்னுடைய ஆதரவை கமல்ஹாசனுக்கும், இந்திய திரை உலகிற்கும் வழங்கி
இருக்கிறார்.
இந்தியாவின் ஜனநாயகத்தை
கட்டிகாக்கவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் காங்கிரஸ் தவிர எந்த கட்சியாலும்
முடியாது என்பது இந்த பிரச்னையில் இருந்து நாம் தெரித்த கொண்ட செய்தி.
கமல்ஹாசன் வழக்கில் இருந்து வெற்றிப்பெற்று அவருடைய படம் நீண்ட நாட்கள் ஓடி
ஒரு வரலாற்று சாதனை புரியவேண்டும் என நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment