மணல் எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். வானத்தில் இருந்து கருமேகம் குளிர்காற்று பட்டு மழை நீர் உருவாகி அது மழையாக பொழிகிறது. அந்த மழையானது பெரும்பன்மையாக மலைபிரதேசங்களில் அதாவது மலைக்குன்றுகள் இருக்கும் பகுதிகளில் மரங்கள் மிகுதியாக இருப்பதால் அங்கே பொழிகிறது அந்த மலைக்குன்றுகளில் பொழிவதால், அந்த மலைக் குன்றுகளில் உள்ள கற்கள் பாறைகள் அரித்து ஆற்று வெள்ளத்தால் அடித்து வரப்பட்டும் நிலப்பரப்புகளில் மழைவெள்ளம் உருண்டோடி வருவதாலும் நிலபரப்பில் உள்ள கற்கள் உடைந்தும் சிறு சிறு துண்டுகளாகவும் பிறகு பொடி பொடியான கற்கள் அதாவது அதைத்தான் நாம் மணல் என்கிறோம், அந்த மணல் ஆற்று வெள்ளம் சமதலத்தில் நிற்கும் போது அப்படியே தேங்கிவிடுகிறது மணல் வெளிகளாக காட்சியளிக்கிறது ஆற்றுத் நீர் வற்றியவுடன். இப்படித்தான் மணல் திட்டு மணல் பரப்பு உண்டாகிறது.
இதே போன்ற ஒரு நிலைதான் நமது தென் பகுதியில் கடற்பரப்பில் உள்ள மணல் திட்டானது மேற்கில் இருந்து அரபிக்கடலாலும், கிழக்கில் இருந்து வங்காளக் கடலாலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் ஒரு இடம் தான் பாம்பன் தீவு இப்பொழுது ராமேஸ்வர தீவு தென்கிழக்கு தமிழகத்தையும் மன்னார் தீவு அதாவது இலங்கையின் வடமேற்கு பகுதியையும் இணைக்கும் விதமாக அமைந்திருக்கிறது அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இயற்கையாக அந்த மணல் மேடானது நாம் மேலே சொன்னது போல முக்கடலும் சங்கமிப்பதாலும் அந்த கடலின் காற்றோட்டத்தாலும் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த முக்கடலும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மோதும் போது அந்த மணலானது அங்கே குவிக்கப்படிருக்கிறது என்றும் அதனால் அதன் வழியாக கப்பற் போக்குவரத்துக்காக சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்தினால் எப்பொழுதும் மணல் மேடு குவிந்த வண்ணம் இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.அதனால் சேது சமுத்திரத்திட்டத்தை மாற்று வழியில் செயலபடுத்தலாம் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
மற்றொரு புறம் அந்த மணல் மேடானது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த குமரிக் கண்டம் (லெமுரிய) கடலில் கொஞ்சம் கொஞ்சமாக அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த பனிக்கட்டிக உருகி கடல்மட்டம் அதிகரிக்க அதிகரிக்க நீர் பரப்பு அதிகரித்து தாழ்வான பகுதியில் இருந்த குமரிக் கண்டம் கடலால் மூழ்கடிக்கப்பட்ட போது அந்த சமயத்தில் இப்பொழுது சர்ச்சைக்குரிய அந்த மணல் மேடானது அந்த கண்டத்திலே வாழ்ந்த மக்களால் கிழிஞ்சல்களையும், மணலைக் கொண்டும் இரண்டு தீவுகளுக்குமிடையே ஒரு பாதையை அமைத்து இருக்கிறார்கள்.
இப்பொழுதுதான் நமக்கு சிமெண்ட் இருக்கிறது, தார் கண்டுபிடித்து விட்டோம் அதனால் சாலைகளை கனரக வாகனங்களை கொண்டு போட்டு விடுகிறோம் .ஆனால் அப்பொழுது இந்த மாதிரியான தொழில் நுட்பம் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் கிடைத்தைக் கொண்டு சாலை அமைத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள் என்று பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த 50 வருடங்களுக்கு முன்பு கூட நாம் சுண்ணாம்பு கலவையைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஆக இந்த பாலமானது பிறகு தண்ணீர் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க நாளடைவில் நீருக்கு அடியில் சென்றுவிட்டது. அந்த பாலத்தைதான் நாம் இப்பொழுது ஆதாம்பாலம் என்கிறோம். இந்த பாலமானது இரு தீவுகளில் இருந்த மக்களால் போடபட்டிருக்க வேண்டும் என்பதே ஒரு கூற்று.
ராமாயணத்தை இயற்றிய காலத்தில் அந்த பாலமானது இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நாம் நம்புவோமாக.ஏனென்றால் இராமாயணம் இயற்றி 3 ஆயிரம் வருடங்கள் தான் இருக்கும்.
ராமாயணம் என்பது ஒரு இலக்கியம் அது நாளடைவில் நாம் அதற்கு வெவ்வேறு பெயர்கள் வைத்து அதை புனிதபடுத்திவிட்டோம் அல்லது அந்த அளவிற்கு அதைக் கொண்டுவந்து விட்டார்கள் எனலாம்.
எப்படி இப்பொழுது உள்ள இலக்கிய வாதியான சாருவும், ஜெய மோகனும் ஒரு இலக்கியத்தை படைக்கிறார்கள் அந்த இலக்கியத்தில் வரும் நாயகன் ஒரு சாகச நாயகன் என்று வைத்துக் கொள்வோம் அவன் ஆகாத்தில் பரந்து செல்கிறான் அப்படியே வேறொரு கிரகத்துக்கு போகிறான் அல்லது நிலாவிற்கு செல்கிறான் என்றெல்லாம் கற்பனைக் கதைகள் அந்த புத்தகத்தில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அதனால் அந்த நிலாவையே உருவாக்கியது அவன் தான் என்றும் அந்த நிலாவை கண்டுபிடித்ததும் நிலா என்று பெயரிட்டதும் அவன் தான் என்றும் 5 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு அல்லது 10 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கூறினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
ஏனென்றால் நமக்கு நிலா என்று சொல்லக் கூடிய கிரகம் நம்முன்னோர்கள் கண்டுபிடித்து பெயரிட்டிருந்தார்கள் அதில் அமெரிக்க விஞ்ஞானிகள் நீல் ஆம்ஸ்டராங் சென்று வந்துவிட்டாகள் என்று நமக்குத்தெரியும் அதெல்லாம் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது முதன் முதலில் சென்றவர்கள் என்று. நம்முடைய சமகாலத்தில் வாழும் இலக்கியவாதிகள் படைக்கும் கற்பனையை நாம் ரசித்துவிட்டு போய்விடுகிறோம் அதற்காக 10 ஆயிரம் வருடங்கள் கழித்து அதை கண்டுபிடித்தது அந்த இலக்கியத்தில் வரும் நாயகன் தான் என்று வாதிடுவது எந்த விதத்தில் நியாயம் இருக்கிறது.
அதைப் போலத்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம்முன்னோர்களால் சிறந்த முறையில் கட்டப்பட்ட ஒரு சாலையை அல்லது பாலத்தை கற்பனையான நாயகன் தான் கட்டினான் என்று கூறுவது சரியா?
பார்க்க போனால் அந்த பாலத்தை வடிவமைத்து சுண்ணாம்பு கற்களையும் மணலையும் கொண்டு கட்டியதற்க்கு நமது முன்னோர்கள் தமிழர்களாகிய திரவிடர்களுக்கே அந்த நற்பெயர்கிடைக்க வேண்டும் சிறந்த வல்லுனர்களாக விளங்கியதற்கான சான்றாக எடுத்துக் கொண்டும் மிகவும் திறமைவாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க வாய்ப்பில்லை.
ஆதலால் அந்த பாலமானது திராவிட கலாச்சாரத்திற்கு சான்றாக விளங்குகிறது, பண்டையத் தமிழர்களின் நாகரிகத்தையும் சிறந்த வல்லுனர்களாகவும் விளங்கியிருக்கிறார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்திருக்கிறது இந்த பாலத்தின் பெருமையெல்லாம் தமிழர்களாகிய நம்மையேச் சாரும் வேறுயாரும் இதை சொந்தம் கொண்டாட முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment