எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, March 19, 2011

இயக்குனர் பாலுமகேந்திராவுடன் - கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்

எங்களது அலுவலகத்தில் மொட்டை மாடி கூட்டம் எப்பொழுதும் நடைபெறுவது உண்டு. அந்த மொட்டை மாடிக்கூட்டத்தின் நோக்கமே பயனுள்ள அரட்டை என்றும் சொல்லலாம். அதில் ஏதாவது ஒரு தலைப்பு அரசியலைப் பற்றியோ, புத்தகம் எழுதுவதைப் பற்றியோ, சினிமாவை பற்றியோ அல்லது பொருளாதாரத்தைப் பற்றியோ என்று ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அந்த துறையின் வல்லுனர்களை அழைத்து அதைப் பற்றி பேசி விவாதம் நடப்பதுண்டு.

இந்த கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சில சமயங்களில் கூட்டம் நிறைய வரும் பல ச்மயங்களில் கூட்டம் குறைவாக இருக்கும்.

சுதந்திரமாக எல்லாரும் கலந்து பேசி கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். சில சமயங்களில் காரசாரமான விவாதம் நடைபெறும்.அப்படி நேற்றைய கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் ” எழுத்தில் இருந்து திரைக்கு " என்கிற தலைப்பில் பேசினார்.
மிகவும் அழகாக, தெளிவாக ஒரு படைப்பை எப்படி எடுக்கவேண்டும் என்று உரையாற்றினார்.

ஒரு சிறுகதையில் இருந்து எப்படி படத்தை எடுக்கலாம். அந்த கதை அப்படியே எடுக்கவேண்டுமா அல்லது அந்த கதையின் கருவை மையமாக வைத்து மட்டுமே எப்படியெல்லாம் படமெடுக்கலாம் என்கிற விஷயத்தை மிகவும் எதார்த்தமாக சொன்னார். நேற்று கலந்து கொண்டு இளம் வளரும் இயக்குனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு சிலர் குற்றம் கண்டு பிடித்து கூட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக்கொள்ளும் விதமாக அதிமேதாவி தனமாக பேசுபவர் எப்பொழுதுமே வருவதுண்டு.

ஒரு துறையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன்பு அந்த துறையைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் அல்லது குறைந்தபட்சம் தெரிந்தாலாவது விமர்சனம் செய்யலாம், இல்லையென்றால் சந்தேகத்தை மட்டும் கேட்டுவிட்டு சென்றால் நன்றாக இருக்கும்.

அது போல ஒரு சிறுகதை எழுத்தாளார் பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

மிகவும் பயனுள்ளதாக இருந்தது நேற்றையக்கூட்டம். இது போல கிழக்கு மொட்டை மாடி கூட்டத்திற்கு முடிந்தவரையில் எல்லாரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

கிருஷ்ண பிரபு said...

பிரதிபலிப்பான். உங்களுடைய பதிவின் சுட்டியை என்னுடைய பதிவில் பயன்படுத்திக் கொண்டேன்.

http://thittivaasal.blogspot.com/2011/03/blog-post_18.html

நன்றி...

கிருஷ்ண பிரபு said...

/-- பாலுமகேந்திராவின் சினிமாவைப் பற்றி விமர்சித்தார். எப்படியோ அவருடைய கோபத்தை நேற்று கொட்டித் தீர்த்துவிட்டார்--/

எவ்வளவோ பார்த்துட்டோம்... திட்டு வாங்குறது எல்லாம் எங்களுக்கு தூசுங்க.

:-))