எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, October 5, 2009

காம்ரேட்டுகளின் கடவுள் நம்பிக்கை

பூசை புனஸ்காரங்களுடன் காம்ரேட்டுகளின் கொண்டாட்டம் இது தான் இன்றைய நிலை கம்யூனிஸம் எங்கே?


2 comments:

TAMILSUJATHA said...

ஐயோ பாவம்! ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாவிட்டாலும் கம்யூனிஸ்ட்களைக் கிண்டல் செய்யத் தெரிந்திருக்கிறது! தொடர்க உங்கள் சிறப்பான பணி!

பிரதிபலிப்பான் said...

///ஐயோ பாவம்! ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாவிட்டாலும் கம்யூனிஸ்ட்களைக் கிண்டல் செய்யத் தெரிந்திருக்கிறது! தொடர்க உங்கள் சிறப்பான பணி!//

விமர்சனம் என்பது நம்மிடையே உள்ள குறையை நிவர்த்தி செய்வதற்க்காக தான் என்று எடுத்துக் கொண்டு தவறை திருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய ஏன் இப்படி கிண்டலாக போடறீங்க என்று நீங்கள் கேட்பது சரியாக படவில்லை.

ஆனாலும் நான் என்ன நினைத்தேன் என்றால், கம்யுனிஸ்ட்டு தொழிற்ச்சங்கத்தில் இருந்தால் அல்லது அந்த சங்கத்தில் சேர நினைப்போர் ஏற்கனவே உறுப்பினாராக இருப்போரெல்லாம் கம்யுனிஸக் கொள்கையை கடைபிடிப்பார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு தெரிய வந்தது கம்யுனிஸ்ட்டுகளுக்கு அரசியல் கொள்கை வேறு தொழிற்சங்க கொள்கை வேறு என்று. ஏன் இந்த இரட்டை நிலைபாடு என்று எனக்கு புரியவில்லை?.

ஒருவேளை அரசியல் கொள்கையில் காலத்துக்கேற்ற கொள்கை மாற்றம் வரவில்லையோ? என்றெண்ணத் தோன்றுகிறது.

தொழிற்சங்கத்தில் இருப்போரெல்லாம் கடவுள் நம்பிக்கை வைத்துக் கொள்ளலாம் அதை நீங்கள் கண்டும் காணாமல் இருப்பீர்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

அவர்களை உங்களின் கொளைகைக்கு மாற்ற முடியாததின் காரணம் என்ன?

அந்த படத்தை நான் எங்கள் பகுதியில் ஓரிடத்தில் எடுத்தது. என்னால் சரியாக படம் எடுக்க முடியவில்லை நிறைய தொழிலாளர்கள் இருந்தார்கள். பக்கத்தில் போய் படம் எடுத்தால் எங்கே அடிக்க வந்து விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக தொலைவில் இருந்து எடுத்தது.
அதனால் சரியாக தெரியவில்லை.