எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, July 3, 2009

தி.மு.க. வின் ஜனநாயக விரோத போக்கு

திருச்சியில் கடந்த 21-ம் தேதி தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது.தங்கபாலு பேசும்போது
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும்
என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி
கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும்
அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூடபாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்'என்கிறார்.

என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின்
வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு
நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை
போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல்
அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.

அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது .
இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி
இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் மக்கள் காங்கிரஸை அதன் கொள்கையின்
அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல
திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று
சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,
அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.

நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை
தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.
அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை.
மக்கள் காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.

தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க
வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும்,
அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும்
எதிர்காலத்தில் அடிபணிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments: