எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, October 15, 2008

கலைஞரின் கபட நாடகமும் ! கனிமொழியின் கதாபாத்திரமும் ! அம்மாவின் வெகுளித்தனமும் !








கலைஞரின் கபட நாடகம் நாடறிந்த விஷயமாயிற்று என்று அம்மா வெகுளித்தனமாக சொல்கிறார்.

அம்மாவின் கேள்வி கணைகள்.

1. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை, ஐந்து முறை முதல்வரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தை.

கலைஞர் பதில் - இதெல்லாம் எனக்கு தெறியும்.

2. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். "இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை.

கலைஞர் பதில் - இதுவும் எனக்கு தெறியும்.

3. லோக்சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவடைய உள்ளது. மத்திய அமைச்சர்களைப் பற்றி தீர்மானத்தில் சேர்க்கவில்லை. மாநில அரசே பதவி விலகும் என கருணாநிதி ஏன் அறிவிக்கவில்லை?மாநில அரசுக்கு இன்னும் இரண்டரை ஆண்டு காலம் பதவிக்காலம் இருப்பதால், அதைப் பற்றி தீர்மானத்தில் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.

கலைஞர் பதில் - நான் ராஜினாமா செய்தால் மக்கள் நிம்மதியாகிவிடுவார்களே !.

4.உண்மையிலேயே கனிமொழிக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால்,
ராஜ்யசபா தலைவரிடம் தன் ராஜினாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டு கொடுத்திருக்க வேண்டும்.

கலைஞர். பதில் - என்னுடைய நாடகத்தில் நடிக்கும் போது அவளொரு நடிகை மட்டுமே.
என்ன இதுகூடபுரியாமல் அம்மா அறிக்கை விடறாங்க, நாடகத்தில் சாவதைப் போல்
ஒரு சீன் இருந்தால் அவனென்ன உண்மையாகவா இறந்து போவான்.

5.உண்மையிலேயே கருணாநிதிக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால்,
மத்திய மந்திரி சபையில் இருந்து தி.மு.க.,வைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் உடனே பதவி விலக வேண்டும். மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை, அனைத்து எம்.பி.,க்களும் திரும்பப் பெற வேண்டும். தி.மு.க., அரசும், தமிழகத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிய முன்வர வேண்டும்.

கலைஞர். பதில் - அய்யோ அய்யோ இந்த உலகம் இன்னுமா என்னை நம்புது.

கலைஞர் ஏன் இவ்வளவு காலம் மௌனம் சாதித்தார் என்பது ஏன் என்று தெறியாமல் இவர் இலங்கைத்தமிழர்களுக்காத்தான் குரல் கொடுக்கிறார் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் சொல்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல மக்களை திசைதிருப்பும் குடும்ப நாடகம் மின்வெட்டு பிரச்சினை,அமைச்சர்களின் கட்டப் பஞ்சாயத்து பிரச்சினை, மணல் திருட்டு, அரசிகடத்தல் போன்ற பிரச்சினைகளால் மக்கள் தி.மு.க அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கும் போது எப்படி அவர்களை திசையை மாற்றலாம் என்றெண்ணும் போதுதான் கலைஞருக்கு தோன்றிய நாடகம், எல்லாக் கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்காக களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் போது.தானும் ஏதாவது செய்து போராடுவதைப் போல அரசியல் stunt அடிச்சி, குடும்ப நாடகத்தை அரங்கேற்றி விட்டார்.

கனிமொழி நாடகத்தில் முதல் மதிப்பெண் பெற்று முன்னிலை வகிக்கிறார்.(தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதிணாரடி பாயும்)என்பதை நிருபித்து தன் அப்பா இயற்றிய நாடகத்தில் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார்.

இரண்டு வாரகாலத்தில் போர் நிருத்தத்தை அறிவிக்க மத்திய அரசு இலங்கைக்கு நிர்பந்த்திக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழக M.P க்கள் பதவி விலகுவார்கள் என்று சொன்னவர், தமிழக அரசு ராஜினாமா செய்யும் என்று ஏன் அறிவிக்கவில்லை.ஏனென்றால் பதவி ஆசை, இன்னும் நிறைய சம்பாத்திக்கவேண்டுமென்ற வெறி.

கலைஞரின் குடும்பம் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தால் போதும் தமிழ்நாடு எல்லாவித்ததிலும் முன்னேற்றமடையும் என்பது அனைவரின் ஒருமித்தக் கருத்தாக இப்பொழுது அமைந்துவிட்டது.

8 comments:

அத்திரி said...

//நான் ராஜினாமா செய்தால் மக்கள் நிம்மதியாகிவிடுவார்களே//

அருமையான கேள்வி பதில். கலக்கிட்டீங்க. செத்தாலும் புத்தி வராது.

ananda said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Unknown said...

எல்லத்துலயும் குறை கண்டுபிடிக்கும் அம்மா.. அம்மாக்கு வேற வேல இல்லப்பா... இங்கே சொன்ன மாதிரி.. http://arataiarangam.blogspot.com

Kalaingar said...

லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..

லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை

லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?

லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..

இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..

அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..

இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..

லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...

george said...

//இரண்டு வாரகாலத்தில் போர் நிருத்தத்தை அறிவிக்க மத்திய அரசு இலங்கைக்கு நிர்பந்த்திக்க வேண்டும் இல்லாவிட்டால் தமிழக M.P க்கள் பதவி விலகுவார்கள் என்று சொன்னவர், தமிழக அரசு ராஜினாமா செய்யும் என்று//

மத்தியில வாபஸ்நா மிரட்டலுக்கு பயந்து ஏதாவது பண்ணுவாங்க ...

தமிழக அரசு ராஜினாமா செய்ஞ்சா ..என்ன பிரயோஜனம் ...அம்மா ராஜபக்சே யுடன் பேச்சு வார்த்தையா நடத்த போறாங்க ...

கொஞ்சமாவது ஞாயமா பேசுங்க

Anonymous said...

poyya dupukku

Anonymous said...

கபட நாடகம் ஆடும் ஜெயலலிதா: தமிழ்நாடு முதல்வர் கடும் கண்டனம்


ஈழத் தமிழர் விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கபடம் நாடகம் ஆடி வருகின்றார் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து முதல்மைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு வைகோ வராவிட்டாலும், அனைத்து கட்சிக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட "இரண்டு வாரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு நிலையான அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்து இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்" என்ற தீர்மானத்தை அவரும் ஏற்றுக்கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக தயார் என்று கூறியிருக்கிறார்?

ஆம், அவர் அனைத்து கட்சிக்கூட்டத்திற்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதை படிக்கும்போது நமக்கு புல்லரிக்கிறது. எனவே வரவேற்கத்தக்க அறிவிப்பு. ஆனாலும், ஒன்று "தி.மு.க.வினர் மத்திய மந்திரிகள் பதவியில் இருந்தும் விலக வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"நாடாளுமன்ற உறுப்பினர்" பதவியில் இருந்து விலகினால், மந்திரி பதவியும் தானாகவே போய்விடும் என்பது அவருக்கு தெரியாதா என்ன?. பா.ஜ.க. அமைச்சரவையிலே தி.மு.க. அங்கம் பெற்றிருந்தபோது, அமைச்சரவை பதவிகளைத்தான் துறந்து விட்டு டி.ஆர்.பாலு, ஆ.ராஜா ஆகியோர் வெளியே வந்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

அனைத்து கட்சிக்கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்காக நாம் எடுத்த முடிவு கண்டு அங்கமெல்லாம் பதற அம்மையார் ஜெயலலிதா விடுத்துள்ள அனல் கக்கும் அறிக்கையில் "இலங்கையில் தற்போது நடக்கும் போர் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான போர். இந்த போரில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக செய்திகள் கூறுகின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறாரே?

அம்மையாரின் இந்த அறிக்கையை வைகோ ஏற்றுக்கொள்கிறாரா?

மக்களவை உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய மந்திரிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட அதில் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?

அம்மையார், முதலில் அந்த தீர்மானத்தை மீண்டும் மீண்டும் படித்து தெளிவு பெற வேண்டுகிறேன். "தீர்மானங்கள் செயல் வடிவம் பெறவும், இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வரா விட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்" என்றுதான் தீர்மான வாசகம் இருக்கிறதே தவிர, "மக்களவை உறுப்பினர்கள்" என்று இல்லை.

"நாடாளுமன்ற உறுப்பினர்கள்" என்பதில் மாநிலங்களவை உறுப்பினர்களும், மத்திய மந்திரிகளும் அடங்குவார்கள் என்பதை, நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை. மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கும் அத்தீர்மானம் பொருந்தும் என்பதால் தானே, கனிமொழி 29-10-2008 நாளிட்டு தனது பதவி விலகல் கடிதத்தை இன்னும் இரண்டு வார காலக்கெடு இருந்த போதிலும் முன்கூட்டியே அனுப்பியிருக்கிறார்.

தமிழினத்தை இலங்கையில் அழிந்து போகாமல் காப்பாற்ற தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தை, கண்துடைப்பு நாடகம், கபட நாடகம், மோசடி நாடகம், செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா; அதே அறிக்கையில் "கபட நாடகம்'' என்ற சொற்றொடரை மட்டும் பத்து இடங்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறார்; அதோடு விடாமல் "தனக்கும் கபட நாடகத்தை அரங்கேற்ற தெரியும் என்பதை கனிமொழி நாட்டு மக்களுக்கு உணர்த்தியிருப்பதாக" ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளது பற்றி?

"இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று", இந்த குறளின் பொருளை அம்மையார் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாகும்.

"உண்மையிலேயே கனிமொழிக்கு இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், ராஜ்ய சபா தலைவரிடம் தன் பதவி விலகல் கடிதத்தை இன்றைய நாளிட்டு கொடுத்திருக்க வேண்டும்" என்கிறாரே ஜெயலலிதா?

அனைத்து கட்சி தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு உரிய விளைவு ஏற்பட, அந்த கூட்டத்திலேயே, அந்தத் தீர்மானத்திலேயே இரண்டு வாரங்கள் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெயலலிதா காலக்கெடுவைப் பற்றி கவலைப்படாமல் பதவி விலகல் கடிதத்தை உடனடியாக மாநிலங்கள் அவைத் தலைவரிடம் கனிமொழி ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கிறார். ஜெயலலிதாவின் அவசரத்திற்கு காரணம், இலங்கை தமிழர் பிரச்சினையின் மீதுள்ள அக்கறை அல்ல, கனிமொழி எப்படியாவது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியில் இருந்து இந்த காரணத்தையொட்டி வெளியே வந்துவிட மாட்டாரா என்ற நல்லெண்ணம் (?) தான் காரணம்.

"பொழுது போக்குக் கூட்டம் போல அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது", மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருப்பது மிகப்பெரிய மோசடி நாடகம், என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

தமிழகத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டு மூன்றரை மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு விவாதித்த கூட்டத்தை அம்மையார் பொழுது போக்கு கூட்டம் என்கிறார்!. இதற்கு அந்த தலைவர்கள் தான் பதில் கூற வேண்டும்.

தற்போது மத்தியில் உள்ள அரசு கருணாநிதி சொன்னதை செய்யக்கூடிய அரசு என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதை பற்றி?

வாஜ்பாய் அமைச்சரவையில் அ.தி.மு.க. அங்கம் வகித்த போது பிரதமரை ஒருநாள் கூட அமைதியாக தூங்க விடாமல் செய்தவர் ஜெயலலிதா. அதற்கு மாறாக தற்போதுள்ள கூட்டணி அரசு தோழமை உணர்வுடன் செயல்படுகிறது என்பதை சொல்கிறார் போலும்!.

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் பற்றியும், கருத்து வெளியிட்டு அறிக்கை வழங்கியுள்ள ஜெயலலிதா மத்திய மந்திரிகள் மூலமாக கருணாநிதிக்கு வருமானம் வருகிறது என்று கூறியிருக்கிறாரே?

தன்னைப் போலவே பிறரை நினைக்கும், தயாபரி அல்லவா, ஜெயலலிதா!.

கருணாநிதியின் கபட நாடகத்தை கண்டு தமிழர்கள் ஏமாறத் தயாராக இல்லை என்று அறிக்கையில் ஜெயலலிதா சொல்கிறாரே?

"கபடம்" என்றால் "வஞ்சகம்" என்று அகராதியில் பொருள் கூறப்பட்டுள்ளது. அந்த பொருளுக்கு தமிழகத்திலே பொருத்தமானவர் யார் என்பதை தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள். ஜெயலலிதாவின் அறிக்கையை யாராவது பாராட்டுவார்களா?, ஏன் பாராட்ட மாட்டார்கள்?

இதோ, இன்று வெளிவந்துள்ள "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய தீர்மானத்திற்கு பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது.

அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?. "நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்".

இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா?. உண்மையில் காட்டிக்கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?.

ஆதாரம்: தினத்தந்தி

http://www.puthinam.com/full.php?2e1VoA00aycYU2edAA4K3bce6DD4d4D1e2cc24mI2d43YOA2a03oMV3e

Anonymous said...

முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டுவதா?: ஜெயலலிதாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்


இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கேட்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் சாடியுள்ளார்.
சென்னையில் நேற்று வியாழக்கிழமை காலை பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசைத் திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதனை ஜெயலலிதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்தே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக்கேடானது. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார்.

பாகிஸ்தானில் உள்விவகாரத்தில் இந்திய அரசு இராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும். தமிழர்களுக்கு எதிரான இன வெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராபக்சேயின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார்.

இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கை பொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று அதில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.