எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, March 23, 2009

இந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்


இந்தியப் பிரிவினை ஜின்னாவின் தொலை நோக்குப்பார்வையிலும் சரி என்னுடைய பார்வையிலும் சரி நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியானதே.

காந்தி பல விஷயங்களில் கொஞ்சம் கோணலாக சிந்திப்பவர்தான். அவர் இதற்கும் விதி விலக்கல்ல.

ஜின்னா அன்று செய்த மாபெரும் நல்லக் காரியம் இந்தியப் பிரிவினை. அவர் அவ்வாறு யோசித்ததனால் தான் இந்தியாவில் நாம் இன்று நிம்மதியாக வாழ்கின்றோம் இல்லையென்றால் இப்பொழுது பாகிஸ்தானில் எவ்வாறு பயங்கரவாதம் படுக்கை போட்டுக் கொண்டு பல்லிளிக்கிறதோ அதே போல் இந்தியா முழுதும் பரவி நாட்டை சீரழித்திருக்கும்.

இதனால் நாம் ஜின்னாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னா நினைத்தது வேறு ஆனால் பாகிஸ்தானில் இப்பொழுது நடப்பது வேறு. உலக அரங்கில் முஸ்லீம் ஆகிய நாம் தனித்துவம் பெறவேண்டும் என்பதற்காக பிரிவினையை மேற்கொண்டார். ஆனால் சுதந்திரம் பெற்றப் பிறகு வெகு சில காலங்களிலே அவர் இறந்த கரணத்தால் அவருடை சிந்தனைகள் இன்றளவும் செயல் வடிவம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றாளவும் அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கு முக்கியத்துவம் தந்து உள்கட்டமைப்பை சீரமைத்து சிறந்த வெளியுறவு கொள்கைளை வகுத்து வருங்கால சந்ததியினருக்கு நன்மை எதுவும் அவர்கள் சேர்க்கவில்லை. அவர்கள் அதற்கு மாறாக வன்முறையைத்தூண்டி தவறான பாதையில் தான் அவர்கள் வழி நடத்திச் செல்கிறார்கள்.

அதே போல சக்திகள் நம்முடைய நாட்டிலும் இருக்கிறது R.S.S, V.H.P ஆனலும் அவர்களின் பாட்ச்சா இங்கு பலிக்கவில்லை.மூளைச்சலவை செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர்களை திசை திருப்ப பார்த்தார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்தால் அது பயங்கவாதத்தில் தான் கொண்டுபோய் முடியும் என்ற உதாரணம் பாகிஸ்தான் தான்.

இவர்கள் தோல்வி அடைந்ததிற்கு காரணம் ஹிந்துத்வாவை எதிர்த்த இந்துக்களினால் தான்.

இனிமேலும் மதத்தின் பெயரில் மக்களைத்தூண்டுவதை மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முதல் அத்தியாயமே நம்மை பதைபதைக்க வைக்கிறது. ரயில் வந்து நிற்க்கிறது, ஆனால் யாரும் இறங்கவில்லை, ஏனென்றால் யாருமே உயிருடன் இல்லை. ரயில் முழுவதும் இறந்த உடல்கள் சிதறி கிடக்கின்றன. இப்படி ஒரு பிரிவினை நடந்திருக்கிறது என்று நினைக்கும்போது மனம் வேதனையில் ஆழ்கிறது.

நாம் எல்லோரும் இப்பொழுது இந்தியச் சுதந்ததிர தினத்தை கொண்டாடும் அதே தினத்தில் 1947-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்ததிர தினத்தை கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே!

காந்தி தன்னால் இயன்ற அளவிற்கு போராடிப் பார்த்திருக்கிறார். பேச்சுவார்த்தை, உண்ணாவிரதம், உயிரை பணயம் வைத்து வன்முறை நடைபெறும் இடத்திற்கே சென்று சமாதானம் செய்வது என்று தன்னால் முடிந்த அளவிற்கு முயற்ச்சித்திருக்கிறார்.

கத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்றோம் சுதந்ததிரம் என்று பெறுமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அப்படி பெற்ற சுதந்ததிரத்திற்க்காக மிகப் பெரிய விலையை இந்தியா கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

பிரிவினை நடைப்பெற்ற அனைத்து இடங்களிலும் இந்து, முஸ்லீம் இரண்டு தரப்பிலும் பலத்த உயிரிழப்பு, ஏன்? எதற்கு? என்று நம்முள் கேள்விகள் மோதுகின்றன. அதற்க்கான விடையாக அடுத்தடுத்த பிளாஷ் பேக் அத்தியாயங்கள்.

அனைத்து மதங்களும் ஒரே கடவுளை நோக்கியே அழைத்துச் செல்கின்ற என்று பல யுகங்களாக பல பெரியோர் கூறியிருந்தும் அதை காதால் கேட்டும் மனதால் அவற்றை நம்ப மறுப்பதே இன துவேஷத்திற்கு காரணமாக அமைகிறது.

ஒன்றாக இருந்த இந்து, முஸ்லீம் இடையே ஏற்ப்பட்ட இந்த பிரிவினைக்கான ஆணிவேராக மதம் சுட்டிக்காட்டப்படுகிறது. இரு தரப்பினருக்கும் உணவிலிருந்து, கடவுள் வரை வேவ்வேறு பழக்க வழக்கங்கள். இருநதாலும் இரு தரப்பினரும் சேர்ந்து வாழ முடியும் என்ற காந்நிதியின் வாதத்தை ஜின்னா கட்டாயமாக மறுக்கிறார்.

காந்தியின் வாதத்தை உடன் இருக்கும் நேருவும், படேலும் கூட ஏற்றக் கொள்ளவில்லை எனும்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பிரிவினை நேராமல் தடுக்கும் பொறுட்டு மவுண்ட்பேட்டன், ஜின்னாவுடன் சேர்ந்து நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிகின்றன. பாகிஸ்தான் வேண்டும் என்ற உறுதியாக இருந்தார் ஜின்னா.


இந்தியப் பாகிஸ்தான் பிரிக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளும் பீரிட்டீஷ்காரரான ராட்கிளிஃபுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது இந்திய எல்லைகளை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவரிடம் இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கான பணி ஒப்படைக்கப்படுகிறது.

இரண்டே மாதங்களே இருக்கின்றன என்னால் எப்படி இதைச் செய்ய முய்ய முடியும் என்று மவுண்ட்பேட்டனிடம் கேட்கிறார். மவுண்ட்பேட்டனோ என்ன ஆனாலும் பரவாயில்லை கோடு போட்டுக் கொடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

அவர் இழுக்கப்போகும் கோடு எத்தனை காடு, மலை, ஆறு, கட்டிடங்கள், நிலங்கள், இவையனைத்திற்க்கும் மேலாக மனிதர்களின் இதயங்களைப் பிளக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும் கோடுப் போடுகிறார்.

ஒரு கிராமத்திற்க்கு நடுவே ஒரு கோடு இழுக்கப்பட்டிருந்தது. உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா பின் பக்கம் வந்தால், பாகிஸ்தான்.

பிரிட்டீஷ் அரசோ, புதிதாக அமையப்போகும் இந்திய அரசாங்கமோ பிரிவினைக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்படமால் போனது துரதிர்ஷ்ட்டமே.

ஒரு வீட்டை காலி செய்ய வேண்டுமென்றால்க்கூட நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து இங்கிருப்பவர்கள் அங்கு போகவேண்டும் அங்கிருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் எவ்வளவு நாட்கள் மாதங்கள், வருடங்கள் தேவைப்பட்டிருக்கம், ஆனால் இங்கோ வெறும் சில நாட்களிலேயே பிரிவினை முடிந்து விடுகிறது.

அதற்க்கான விலை மிகவும் பயங்கரம் பெண்கள், குழந்தைகள் என்று எத்தனை அப்பாவி ஜீவன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

பாகிஸ்தானைப் பிரித்துக்கொண்டு போன ஜின்னாவிற்க்கு உடல் நிலை சரியில்லாமல் போக காஷ்மீரில் சென்று ஓய்வெடுக்க நினைத்து அதற்க்கான ஏற்ப்பாடு செய்யும்போது காஷ்மீர் மன்னர் அதற்கு அனுமதி மறுக்கவே, மனிதருக்கு வருகிறது கோபம். அந்தக் கோபத்தின் விளைவு இன்றளவும் இந்திய - காஷ்மீர் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது.

ஜின்னா தனக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை கௌரவ பிரச்சனையாக எடுத்துகொண்டு காஷ்மீரை அடைய குறுக்கு வழியை மேற்க்கொள்ளும்போது அவரிடம் நமக்கு இருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விடுகிறது.


பிரிவினைக்குப் பிறகு இநதியாவின் நிலை பரவாயில்லை தட்டுத் தடுமாறி இன்று உலக அளவில் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் நிலையோ பத்திரிக்கையில் படிக்கிறோமே பிறந்த குழந்தையை அநாதையாக குப்பைத் தொட்டியில் கிடந்தது என்று அதுப்போல ஜின்னாவும் பாகிஸ்தானை அநாதையாக நடுத்தெருவில் விட்டு சென்றார். அது இன்றளவும் அப்படியே இருக்கிறது.



புத்தகத்தின் குறைகள் :

நிறைய அத்தியாயங்கள் முடிக்கவேண்டுமே என்கிற கட்டாயத்தில் சுருக்கி எழுதியிருக்கிறார்.

ஒரு சில அத்தியாயத்தில் சில பத்திகள் சற்று ஒன்றுகொன்று தொடர்பில்லாதவையாக இருக்கிறது.

இவருடைய வேறெந்த புத்தகத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்துப் பிழைகள்.

இந்திய பிரிவினை புத்தகத்தில் முழுமைப் பெறவில்லை.

புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments: