எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, February 22, 2008

சென்னைக்கு செல்வாரா லாலு


புனே: ‘தமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள் ளது. லாலு பிரசாத்துக்கு தைரியமிருந்தால், இந்த பிரச்னையை எதிர்த்து, மெரீனா கடற்கரைக்கு சென்று, ‘சாட் பூஜா’ நடத் தட்டும்’ என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆவேசமாகக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, வட மாநிலத்தவருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப் பை ஏற்படுத்தி கலவரமும் ஏற்பட்டது. பீகார், உ.பி., மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதுபற்றி, பீகார் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலு கூறுகையில், ‘ராஜ் தாக்கரே போன்ற வன்முறையாளர்களால் தேச ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், ‘சாட் பூஜா’ சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது வீட்டுக்கு முன்பாக, ‘சாட் பூஜா’ நடத்துவேன்’ என அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில், அவர் எழுதியிருப்பதாவது: மத்தியில் ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அந்த கூட்டணியில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க., போன்ற கட்சிகள் உள்ளன. தி.மு.க., ஆட்சி நடக்கும் தமிழகத்தில், பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளது. லாலுவுக்கு தைரியமிருந்தால், சென்னை மெரீனா கடற்கரைக்கு சென்று, ‘சாட் பூஜா’ நடத்தட்டும். தனது ஆட்சியின் மூலம் பீகாரை மிக மோசமான மாநிலமாக மாற்றியவர் லாலு.

மும்பை மாநகராட்சியில் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென, சில வட மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இவர்கள் முதலில், சென்னை, பெங்களூரு, கவுகாத்தி, ஐதராபாத், கோல் கட்டா போன்ற இடங்களுக்கு சென்று, அங்கு இந்தியை மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கட்டும். அதற்கு பின், மும்பைக்கு வரலாம். மும்பைக்கோ, மராட்டிய மொழிக்கோ அவமானம் ஏற்பட்டால், அதை மண்ணின் மைந்தர்கள் பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டர். இவ்வாறு தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

No comments: