எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, September 26, 2008

தி.மு.க. வின் ஜனநாயக விரோதப் போக்கு






திருச்சியில் கடந்த 21-ம் தேதி தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது.தங்கபாலு பேசும்போது
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும் அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூட பாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்' என்கிறார்.

என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின் வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல் அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.

அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது. இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் காங்கிரஸை மக்கள் அதன் கொள்கையின் அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.

நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.

தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும், அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும் எதிர்காலத்தில் அடிபணிய அல்லது வால் பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Monday, September 22, 2008

முதல் மொட்டை மாடி கூட்டம் - சிந்திக்க சில விஷயங்கள்






எங்களுடைய New Horizon Media மாதம் ஒருமுறை பொது விவாதக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது, இரண்டாவது சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.


முதல் வாரம் என்பதனால் கூட்டம் குறைவாக இருந்தது என்றாலும் நிறைவாகத்தான் இருந்தது (டீ, காபி, சமோசா என்று).நான் எல்லாம் கலந்துகொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது எங்களுடைய முதன்மை ஆசிரியர் பா.ராகவன் எல்லோரையும் அழைத்தார்.எல்லோரும் மொட்டை மாடி கூட்டத்திற்கு வாருங்கள் என்று அப்பொழுதுதான் தெரிந்தது இது எழுத்தாளார்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான் என்று. சரி என்னத்தான் பேசுகிறார்கள், எதைப்பற்றி பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள், ஏன் பேசுகிறார்கள் அதில் நான் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தபோது தான் எனக்கான பொதுவான கருத்துக்களை கொண்ட பேச்சுகள் வந்தது, அப்பொழுதுதான் நினைத்தேன் நாமும் கேள்வி கேட்கலாமென்று அதுகாறும் தயங்கலாகவே இருந்தது. சரி கேட்டுவிடலாம் என்று நினைத்தபோது சாரு அவர்கள் வேரொரு கருத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் இலக்கியத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ரசனையுடன் அவரது பேச்சை கேட்டேன். பிறகு அவர் நிறுத்தி யாராவது கேள்விகள் கேட்கிறீங்களா என்றார் அப்பொழுதுதான் நான் கையை உயர்த்தி கேட்டேன்.

இன்றைய இளைஞர்களுக்கு 200 வார்த்தைகள் தான் தெரிகிறது என்றும் அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் பேசுகிறார்கள் பெண்களிடம் கடலை
போடுகிறார்கள் என்றும் சொன்னார். நான் கேட்டேன் ஏன் அவர்களுக்கு 200 வார்த்தைகள் தான் தெரிகிறது அதற்கு மேல் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா, இல்லை தெரிந்துகொள்ள விருப்பமில்லையா என்று, ஆனால் அவர் ஏதோ சொன்னார் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் அதைப்பற்றி விளக்கமாக கேட்குமுன் அவர் கைகடிகாரத்தை பார்த்துகொண்டே மற்றவர்களை பார்த்தார் உடனே முத்துகுமார் அவர்கள் ஒருகேள்வியை கேட்டார்.

திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வந்ததால் தான் மாணவர்களுக்கெல்லாம் தமிழ் தெரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் திராவிட கழகங்கள் வந்து தானே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் நடத்தி நம் தமிழை மட்டுமே படிக்க வழி செய்த போது எப்படி நீங்கள் அவ்வாறு சொல்கிறீர்களென்று அதற்கு அவர் சொன்னார் நிறைய ஆங்கில பள்ளிகளை திறந்து வைத்துவிட்டு அதனால் பிள்ளைகலெல்லாம் அங்குதான் சேர்ந்து படிக்கிறார்கள் தமிழ் வழி பள்ளிகளில் படிப்பதில்லையென்று அதானால் தான் தமிழ் வளரவில்லையென்றும், மாணவருகளுக்கு தமிழ் தெரியவில்லையென்று சொல்கிறார்.

நான் கேட்கிறேன் எத்தனை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் ஆர்வமுடன் மாணவர்களுக்கு பாடம் நடதுகிறார்கள் அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான மற்றும் பகுத்தறிவுடன் பதிலை சொல்கிறார்கள், மாணவர்கள் கேட்கும் கேள்விகளை சரியான முறையில் புரிந்துகொண்டு அவர்களுக்கு புரியும் விதமாக எத்தனை ஆசிரியர்கள் விளக்கங்களை தருகிறார்கள்.

இதெல்லாம் ஒழுங்காக நடந்தால் தானே அவர்களுக்கு ஆர்வம் வரும்.மொழிகளின் மீது பற்று வரும், படிக்கலாம் என்ற எண்ணம் வரும்,இதையெல்லாம் விட்டு விட்டு நாம் மாணவர்களின் மீது குறை சொல்வது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை.

தமிழ் ஆர்வளர்கள் தான் இந்த மாதிரி எங்கு நாம் தப்பு செய்கிறோம், எங்கு தப்பு நடக்கிறது என்று கண்டுபிடித்து திருத்த முயற்சி செய்யவேண்டும்.

மொழிகளின் மீது ஆர்வத்தை தூண்டவேண்டும் முடிந்தவரை குழந்தை பருவத்திலே நிறையமொழிகளை கற்று கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் நம்முடைய தமிழும் வளரும், நாட்டின் பொருளாதாரமும் வளரும்,நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியுமே மொழிகளில் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் மறக்ககூடாது.

Sunday, September 7, 2008

அணுசக்தி ஒப்பந்தத்தின் வியன்னா வெற்றி

அணுசக்தி ஏற்றுமதியாளர்கள் கூட்டம் வியன்னாவில் சிலதினங்களாக நடைப்பெற்றுவருகிறது அதில் நமக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகது.

இதை 21ம் நூற்றாண்டின் முதல் வெற்றியென்றே சொல்லலாம்.

ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன் என்றால் உலக ஆராய்ச்சியாளர்கள் 21ம் நூற்றாண்டை சீனா மற்றும் இந்தியாவின் நூற்றாண்டாகத்தான் இருக்குமென்று சொல்கிறார்கள்.20ஆம் நுற்றாண்டு அமெரிக்காவுடையதோ அதைபோலத்தான் 21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது அதில் எந்த மாற்றமுமில்லை.

நேற்று நடந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்று வெற்றிபெற்றது.

இதில் குறிப்பிடதகுந்த அம்மசம் என்னவென்றால்

1.அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தம்

மற்றும்

2.அணுகுண்டு சோதனை

போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலேயே Nuclear Supplier Group யின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

அணுமூலப்பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்த இரண்டு ஒப்பந்தகளில் கண்டிப்பாக கையெழித்திடவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே மற்ற நாடுகளிலிருந்து மூலப்பொருட்களயும் தொழில் நுட்பத்தையும் பெறமுடியும்.

ஆனால் நாம் மட்டும் இந்த விதியிலிருந்த்து விலக்கு அளிக்கப்பட்டிருகிறோம் என்றால் உலக நாடுகளின் கவனம் முழுதும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

ஏன் இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்தியா ஒரு போதும் சுயக்கட்டுப்பாட்டை மீறாத,மற்ற நாடுகளின் அரசியல் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காத மற்றும் முக்கியமாக அகிம்சவாத நாடு என்று கருதி,கட்டுப்பாட்டை விதிக்க தேவையில்லை அவர்களாகவே கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என்று நினைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதே போல் ஒரு ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு தருமா என்றால் அது கனவில் கூட நடைபெறாத ஒன்று.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் மிகமுக்கியமான மற்றும் வளரும் பொருளாதாரத்திற்கு அடிப்படையான மின்சார தேவையின் அளவு ஈடுசெய்யப்படும்.

எவ்வளவு விரைவில் தோரியத்திலிருந்தது மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக செய்யவேண்டும், ஏனென்றால் நீண்டகாலத்திற்கு மற்றவர்களையே நம்பிருக்கமுடியாதில்லையா!

வெற்றிகள் தொடர நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக.